மோடிக்கு அத்வானி வாழ்த்து    குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு பா.ஜ.க , தேர்தல் பிரசார குழு தலைவர் பதவி வழங்கப்பட்டது இந்திய அரசியலில் பெரும் திருப் முனையாக கருதப்படுகிறது. தேர்தல் நேரத்தில் மோடி , நாடுமுழுவதும் பிரசாரம்செய்து பாஜக.,வுக்கு ஆதரவை திரட்டுவார் என்று கட்சியின் தேசிய செயற்குழுவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவருக்கு அளித்துள்ள இந்தபதவி மூலம் பா.ஜ.க . பெரும் எழுச்சிபெறும் என்றும் வரும்தேர்தலில் நல்ல வெற்றியை பெறமுடியும் என்றும் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். புதியபதவி ‌பெற்ற மோடிக்கு பலதரப்பினரும் வாழ்த்து தெரிவித்தவண்ணம் உள்ளனர். பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானியும் தொலைபேசியில் மோடியை தொடர்புகொண்டு பேசி ஆசி வழங்கினார்.

Leave a Reply