பாஜக தேர்தல் பிரசாரக்குழு தலைவராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கபட்டதை சிரோமணி அகாலிதளம் வரவேற்றுள்ளது. இந் நடவடிக்கை தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி வெற்றி பெறுவதற்கு ஊக்கமளிப்பதாக இருக்கும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த கட்சியின் முக்கிய தலைவரும், பஞ்சாப் துணைமுதல்வருமான சுக்பீர்சிங் பாதல் கூறியுள்ளதாவது:

தேசத்தை ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசின் ஊழல்களில் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணி மீட்காதா என மக்கள் எதிர்பார்க்கின்றனர். பா.ஜ.க தேர்தல் பிரசாரக்குழு தலைவராக நரேந்திரமோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது, 2014-ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத்தேர்தலில் இக்கூட்டணி வெற்றிபெறுவதற்கு ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது. மத்தியில் உள்ள காங்கிரஸ்கூட்டணி அரசு ஆட்சியிலிருந்து அகற்றப்படுவது உறுதி. காங்கிரஸ் கூட்ணிக்கு எதிரான தேர்தல்பிரசார உத்தியை வகுப்பதில் மோடியன் சேவையை பயன்படுத்திக்கொள்வோம்.

காங்கிரஸ்சை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கான அனைத்து முயற்சி களிலும் பா.ஜ.க.,வுக்கு உறுதுணையாக இருப்போம்” என்றார் சுக்பீர்சிங் பாதல்.

Leave a Reply