காங்கிரஸ்   மக்களை முட்டாளாக்குகிறது காங்கிரஸ் அரசு சாதனைகளை செய்ததாக தம்பட்டம் அடித்துகொண்டு மக்களை முட்டாளாக்குகிறது . ஒருகோடி பேருக்கு வேலைதருவோம் என்று காங்கிரஸ் சொல்லியது. செய்தார்களா? . இந்த அரசின்கீழ் இந்தியமக்கள் யாரும் பலன் அடையவில்லை. என பா.ஜ.க , தேர்தல் பிரசாரகுழு தலைவராக தேர்வுசெய்யப்பட்ட நரேந்திர மோடி பேசியுள்ளார்.

அவர் பா.ஜ.க ,செயற்குழுவில் மேலும் பேசியதாவது . கட்சியில் எனக்கு மிகபெரிய பொறுப்பு வழங்கியிருக்கிறீர்கள். எனக்கு இந்தபதவி கொடுத்துள்ள தலைவர் ராஜ்நாத் சிங் மற்றும் மூத்த தலைவர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துகொள்கிறேன். என் மீது நம்பிக்கைவைத்து இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கோவாமுதல்வர் பாரிக்கருக்கும் நன்றி. சாதாரணதொண்டர்கள் முதல் அனைவரும் எனக்கு இந்தபொறுப்பு தந்துள்ளீர்கள். வழங்கப்பட்ட இந்தபணியை வெற்றிகரமாக செவ்வனேசெய்வேன். ஆளும் காங்கிரஸ் அரசு இந்தமக்களுக்கு எதுவும் செய்யவில்லை. பலசெய்ததாக பாரத் நிர்மான் என தம்பட்டம் அடித்து மக்களை முட்டாளாக்குகிறது.

இந்தியவளர்ச்சியின்மை மக்களுக்கு ஐயத்தை உருவாக்கியுள்ளது . எந்தவொரு முன்னேற்றத்தையும் மனதில் கொள்ளும் நிலையில் காங்கிரஸ் இல்லை. காங்கிரசை நம்ப மக்கள் தயாராக இல்லை. சிபிஐ., மூலம் காங்கிரஸ் மிரட்டிவருகிறது. காங்கிரஸ் அமைப்பு பலவீனமாகிவிட்டது. நாட்டின் திட்டக்கமிஷன் ரப்பர்ஸ்டாம்பாக உள்ளது. பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது. மத்திய அரசின் செயல்பாடுகளை சுப்ரீம்கோர்ட் தலையிட்டு மாற்றியிருக்கிறது. ஜிகே., பிள்ளை மத்திய உள்துறைசெயலராக இருந்தபோது நாங்கள் நக்சலிசத்தை ஒடுக்கினோம்.

ஒருகோடி பேருக்கு வேலைதருவோம் என்று காங்கிரஸ் சொல்லியது. செய்தார்களா? தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் அரசில் 80 சதவீத வேலை வாய்ப்பை உருவாக்கியிருக்கிறோம். ஆனால் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிசெய்யும் மாநிலங்களில் 20 சத வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. காங்கிரஸ் முதல்வர்கள், தலைவர்கள் என்று அனைவரும் ஊழலில்சிக்கியுள்ளனர். மாவோ., நக்சல் ஒழிக்க மத்திய அரசு தவறிவிட்டது. சர்வதேசகூட்டம் ஒன்றில் வெளியுறவுதுறை அமைச்சர் ஒருவர் மற்றநாட்டின் உரையை படித்தார். காங்கிரசின் ஆட்சியில் ராஜ்பவன் காங்கிரஸ் பவனாகமாறுகிறது. பல்வேறு கொள்கை குழப்பங்களில் காங்கிரஸ் சிக்கிதவிக்கிறது.

நாங்கள் யாரும் அதிகாரத்தை விரும்ப வில்லை. வளர்ச்சி பணியைதான் கருத்தில் கொண்டுள்ளோம். காங்கிரஸ்சிடமிருந்து இந்தநாட்டை நாம் மீட்கவேண்டிய நிலையில் உள்ளோம். குஜராத்மாநிலம் சீனாவுக்கு போட்டியாக இருக்கிறது. வாஜ்பாய் தொடங்கி வைத்த பணிகளை நாம் இன்னும் செய்யவேண்டியிருக்கிறது. காங்கிரசிடம் இருந்து இந்தநாடு மீட்கப்படவேண்டும் என்று முடித்தார்

Leave a Reply