தேசிய ஜனநாயக கூட்டணியால் மட்டுமே நம்பகமான ஆட்சியைத்தர முடியும் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.,கூட்டணி அரசின் மீது மக்கள் கோபமடைந்துள்ளனர் , தங்களால்மட்டுமே நம்பகமான மாற்று அரசை தரமுடியும் என பாஜக தெரிவித்துள்ளது.

ஊழல், கொள்கைமுடக்கம், இரட்டை அதிகார மையம் போன்ற பிரச்னைகளில் மத்திய அரசு மூழ்கிக்கிடப்பதால் நாடு பின்னோக்கிசென்று கொண்டிருப்பதா பாஜக குற்றம் சுமத்தியுள்ளது.

கோவா தலைநகர் பனாஜியில் கடந்த இரண்டு நாள்களாக நடந்த பா.ஜ.க தேசியசெயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை முடிந்தது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

ஐ.மு., கூட்டணி தலைமையிலான இரண்டாவது அரசின் நான்கு ஆண்டுகள் நிறைவுவிழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது. ஆனால் விழாகொண்டாடும் அளவுக்கு எந்தவித சாதனையையும் இந்த அரசு செய்யவில்லை.

இந்த அரசில் பிரதமர் மன்மோகன்சிங் பெயரளவுக்கு பதவியில் உள்ளார். அதிகாரம்படைத்தவராக அவர் இல்லை. கொள்கைமுடிவு எடுப்பது உள்பட முழு அதிகாரமும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியிடமே உள்ளது.

ஊழல்: 2ஜி அலைக்கற்றை, காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி, நிலக்கரிச்சுரங்க ஒதுக்கீடு, ஹெலிகாப்டர்பேரம் உள்ளிட்ட பல்வேறு ஊழல்களில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு சிக்கியுள்ளது. இதனால் நாட்டுக்குபேரிழப்பு ஏற்பட்டுள்ளது.

2ஜி ஊழல் விவகாரத்திலும், பிரதமரை கலந்துஆலோசித்த பிறகே எல்லாமுடிவுகளும் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பிரதமர் மன்மோகன்சிங் பொறுப்புவகித்த நிலக்கரி துறையிலேயே ஊழல் நடந்துள்ளதால் , அவரால் ஊழல்குற்றச்சாட்டை மறுக்கமுடியாது. மொத்தத்தில் மத்திய அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள்.
இந்த அரசை வீட்டுக்குஅனுப்ப விரும்புகின்றனர். இந்த அரசுக்கு மாற்றாக பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியால் மட்டுமே நம்பகமான ஆட்சியைத்தர முடியும் என்று மக்கள் கருதுகின்றனர் என்று அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

Leave a Reply