மோடிக்கு நிகரானவர் காங்கிரசிலோ, வேறுகட்சிகளிலோ இல்லை மோடிக்குநிகரானவர் காங்கிரசிலோ, வேறுகட்சிகளிலோ இல்லை என்றும் . பா.ஜ.க தேர்தல் பிரச்சாரகுழு தலைவராக நரேந்திர மோடி நியமிக்கப்பட்டது வரவேற்க்க தக்கது என்றும் பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் இது குறித்து மேலும் தெரிவித்ததாவது , ”மோடியை பிரதமர்பதவி வேட்பாளராக நியமிக்க வேண்டும் என முதன் முதலில் மோடிக்கு ஆதரவாகபேசியவன் நான். ஏனெனில் தொண்டர்கள் அதை விரும்புகிறார்கள். மக்களும் விரும்புகிறார்கள். மோடிக்குநிகரானவர் காங்கிரசிலோ, வேறுகட்சிகளிலோ இல்லை.

ஆனால், சமீப காலமாக என்னை மோடிக்கு எதிரானவன் என சித்தரிக் கிறார்கள். நான் மோடிக்கு எதிரானவன் அல்ல. அதேசமயத்தில், அத்வானி வீட்டுக்கு முன் நடந்தபோராட்டம் கண்டிக்கத்தக்கது”என அவர் கூறினார்.

Leave a Reply