குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு  ஜெயலலிதா வாழ்த்து பாஜக தேர்தல் பிரச்சாரகுழு தலைவராக தேர்வுசெய்யப்பட்டுள்ள குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

போயஸ் கார்டனில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது ;. நான் மத்திய திட்டக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி செல்கிறேன். குஜராத் முதல்வர் நரேந்திரமோடி பா.ஜ.க தேர்தல்பிரச்சார குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது உட்கட்சிவிவகாரம். இதுகுறித்து நான் கருத்துதெரிவிக்க விரும்பவில்லை. இருப்பினும் தனிப்பட்ட முறையில் மோடி எனக்கு நல்லநண்பர். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் எப்பொழுதும் உண்டு. அவர் ஒருசிறந்த நிர்வாகி. குஜராத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டுசென்றுள்ளார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

Leave a Reply