விசி.சுக்லா சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார் சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் காயமடைந்து டெல்லியில் சிகிச்சைபெற்று வந்த மூத்தகாங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான விசி.சுக்லா இன்று சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார்.

சத்தீஸ்கர் மாநிலத்தின் தண்டேவடா வன பகுதியில் சென்ற மாதம் 25-ம் தேதி காங்கிரஸ் கட்சியினர் நடத்திய யாத்திரைமீது மாவோயிஸ்டுகள் மிகப்பெரும் தாக்குதல் நடத்தினர். இதில் அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் மகேந்திரகர்மா உள்ளிட்ட 28 பேர் பலியாகினர். மூத்தகாங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான விசி.சுக்லா உள்ளிட்ட 35பேர் படுகாயமடைந்தனர். படுகாயம் அடைந்த விசி.சுக்லா டெல்லி மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் . இந்நிலையில் அவருக்கு சிகிச்சைபலனின்றி இன்று உயிரிழந்தார்.

Leave a Reply