மோடியை  நியமித்ததன் மூலம் பா.ஜ.க சரியான செயலைசெய்துள்ளது ஊழல் குற்றச்சாட்டு எதிலும் சிக்காத மோடியை பிரச்சாரக்குழு தலைவராக நியமித்ததன் மூலம் பா.ஜ.க சரியான செயலைசெய்துள்ளது என்று உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதல்வர் பி.சி.கந்தூரி கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; ஐ.மு.கூட்டணி, ஊழலின் அனைத்துவரம்புகளையும் கடந்துவிட்ட நிலையில், ஊழல் குற்றச்சாட்டு எதிலும் சிக்காத மோடியை பிரச்சாரக்குழு தலைவராக நியமித்ததன் மூலம் பா.ஜ.க சரியான செயலையே செய்துள்ளது. மோடியின் நிர்வாகத்திறமை அனைவரும் அறிந்ததே .

இந்தமுடிவினால் 2014 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க .,வுக்கு ஆதாயம்கிடைக்கும். அதேநேரம் கட்சியின்வளர்ச்சிக்கு அத்வானியின் பங்களிப்பை யாரும் மறுக்கவோ, பிரதமர்பதவிக்கான அவரது தகுதிபற்றி கேள்வி எழுப்பவோ முடியாது. இன்றும் கூட தலைமைபதவிக்கு அவர் முற்றிலும் பொருத்தமானவராக உள்ளார் என்றார் .

. உத்தரகாண்ட் முன்னாள் முதல்வரான பி.சி.கந்தூரியும் பா.ஜனதா செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை இவர் அதிர்ப்த்தியால் தான் கலந்து கொள்ளவில்லை என்று ஊடகங்கள் புரளிகிலப்பியது குறிப்பிட தக்கது

Leave a Reply