ஒரே இந்தியா, சிறந்த இந்தியா சர்தார் வல்லபாய்பட்டேலுக்கு உலகிலேயே மிக உயரமான சிலை அமைக்கபடுகிறது. இதற்காக நாடுமுழுவதும் 5 லட்சம் கிராமங்களில் உள்ள விவசாயிகளிடமிருந்து இரும்புபொருட்கள் நன்கொடையாக திரட்டப்படும் என, குஜராத் முதல்வர் நரேந்திரமோடி  அறிவித்துள்ளார் .

சுதந்திர இந்தியாவில், பண்டித ஜவகர்லால்நேரு தலைமையிலான மந்திரி சபையில் உள்துறை மந்திரியாக பதவிவகித்தவர், சர்தார் வல்லபாய்பட்டேல். நாடுமுழுவதும் உள்ள சமஸ்தானங்களை இணைத்து ஒரே இந்தியாவை உருவாக்கியவர் என்பதால், அவரை இந்தியாவின் இரும்புமனிதர் என்று, நாட்டுமக்கள் அன்புடன் அழைப்பார்கள்.

வரும், அக்டோபர், 31ம் தேதி, சர்தார் வல்லபாய்படேல் பிறந்த தினம் கொண்டாடபடுகிறது. இரும்புமனிதர் எடு , அழைக்கப்பட்ட படேலுக்கு, நர்மதாநதியின் மீது கட்டப்பட்டுள்ள, சர்தார்சரோவர் அணைக்கு எதிரே, 182 மீட்டர் (392 அடி) உயரசிலை அமைக்க, குஜராத் முதல்வர், நரேந்திரமோடி தலைமையிலான, பா.ஜ.க , அரசு திட்டமிட்டுள்ளது. ஒற்றுமைசிலை என, அழைக்கப்படும், இந்தசிலை, முற்றிலும் இரும்பால் அமைக்கப்பட உள்ளது. இதற்காக, நாடுமுழுவதும் உள்ள விவசாயிகளிடம் இருந்து, சிறு சிறு துண்டுகளாக, இரும்புசேகரிக்க, முதல்வர், நரேந்திரமோடி திட்டமிட்டுள்ளார். சர்தார் வல்லபாய் படேல், பிறந்த தினத்தன்று, இரும்புசேகரிக்கும், நாடுதழுவிய பிரசார இயக்கம் துவக்கப்படும்.

இது குறித்துமோடி மேலும் தெரிவித்ததாவது ; இந்தியாவை ஒன்றுபட்ட தேசமாக மாற்றியவர், சர்தார் வல்லபாய்படேல். ஆனால், படிப்படியாக அவரைப்பற்றிய நினைவுகள் மறைந்துவிட்டன. இரும்பு மனிதரான அவரை, நினைவு கூறும் வகையில், பிரமாண்ட சிலை அமைக்கப்படும். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள சுதந்திரதேவி சிலையை விட, இரண்டுமடங்கு உயரம்கொண்டதாக, வல்லபாய்படேல் சிலை அமையும்.சுதந்திர போராட்டத்தில், விவசாயிகள் ஈடுபடகாரணமாக இருந்தவர் படேல். அதனால், விவசாயிகளிடம் இருந்து, சிறுசிறு துண்டுகளாக இரும்புசேகரித்து, அவரது சிலை அமைக்க பயன்படுத்தப் படும். மேலும் ”ஒரே இந்தியா, சிறந்த இந்தியா” என்ற கோஷத்தையும் அப்போது அவர் எழுப்பினார்.

Leave a Reply