பாஜக.,வின்  உள்விவகாரங்களில் ஆர்எஸ்எஸ். தலையிடு வதில்லை பாஜக.,வின் உள்விவகாரங்களில் தாங்கள் தலையிடு வதில்லை என ஆர்எஸ்எஸ். அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆர்எஸ்எஸ்.ஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராம்மாதவ், தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எல்கே.அத்வானி போன்ற பெரும் தலைவர் ஒருவருக்கு அறிவுரை தேவைப்படும் போது, நாட்டிலும் சமூகத்திலும்உள்ள பெரியவர்கள் ஆலோசனை தருவார்கள் . ராஜிநாமாமுடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ஆர்எஸ்எஸ். தலைவர் மோகன்பாகவத் மட்டுமின்றி மேலும் பலரும் அத்வானிக்கு அறிவுரைவழங்கினர்.

அத்வானிக்கு பாகவத் ஆலோசனைமட்டுமே தெரிவித்தார். அவருக்கு ஆலோசனை வழங்கும் ஒவ்வொருவரும் பாஜக.வின் உள்விவகாரத்தில் தலையிடுவதாக அர்த்தமாகாது. பாஜக.வின் விவகாரங்களை நிர்வகிப்பது அல்லது தலையிடுவது_ஆகியவற்றில் ஆர்எஸ்எஸ். எப்போதும் ஈடுபடாது என்றார் ராம்மாதவ்.

Leave a Reply