ஓட்டுக்காகவே உணவுபாதுகாப்பு மசோதா ஓட்டுக்காகவே தேசிய உணவுபாதுகாப்பு மசோதா விஷயத்தில் மத்திய அரசு தீவிரம்காட்டி வருவதாக குஜராத் முதல்வர் நரேந்திரமோடி குற்றம் சுமத்தியுள்ளார்.

ஏழை எளியமக்களுக்கு குறைந்த விலையில் அரிசிகிடைப்பதை உறுதிசெய்யும் தேசிய உணவு பாதுகாப்பு மசோதாவை தாக்கல்செய்வதற்காக நாடாளுமன்ற சிறப்புகூட்டத்தை கூட்ட மத்திய அரசு முடிவுசெய்தது. இதற்கு மற்ற கட்சிகளிடம் இருந்து போதிய ஆதரவு கிடைக்காததைதொடர்ந்து இந்த மசோதாவை அவசரசட்டமாக வெளியிடுவது குறித்து மத்திய நடவடிக்கை எடுத்து வருகிறது . இந்நிலையில் ஓட்டுக்காகவே உணவுபாதுகாப்பு மசோதா விஷயத்தில் மத்தியஅரசு தீவிரம்காட்டி வருவதாகவும், இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்ற வழிமுறைகளை பின்பற்ற மத்திய அரசு தயாராகஇல்லை என்றும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் பேசியதாவது: காங்கிரஸ் கட்சி எப்போதும் வாக்குகளை பற்றிதான் கவலைப்படுகிறது. அதற்காகவே உணவுபாதுகாப்பு மசோதாவை அவசர சட்டமாக்க யோசித்துவருகிறது. கிடங்குகளில் வீணாகும் தானியங்களை ஏழைகளுக்கு வினியோகம்செய்யுங்கள் என உச்ச நீதிமன்றம் அறிவுரைவழங்கியது. ஆனால் மத்தியஅரசுக்கு அதில் அக்கறையில்லை. கெட்டுப்போன தானியங்களை கிலோ 65காசுக்கு ஆல்கஹால் உற்பத்திசெய்யும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு விற்பனைசெய்து வருகிறது. ஏழைகள்மீது அக்கறை இருந்தால் உச்ச நீதிமன்ற உத்தரவை மத்திய அரசு மதித்துநடந்திருக்கும். இந்திய உணவுகழகத்தை கொள் முதல்பிரிவு, மேலாண்மை பிரிவு மற்றும் வினியோகபிரிவு என்று மூன்று பிரிவுகளாக பிரிக்கவேண்டும் என மத்திய அரசுக்கு யோசனைதெரிவித்தேன். ஆனால் இதனை மத்திய அரசு ஏற்கவில்லை. இதனை மத்திய அரசு ஏற்றால் கிடங்குகளில் தானியங்கள் வீணாவது தவிர்க்கப்படும். இவ்வாறு மோடி பேசினார்.

Leave a Reply