கூட்டணி கட்சிகளை பா.ஜ.க ஒருபோதும் விட்டுக்கொடுக்காது ஐக்கிய ஜனதாதளம் தேசிய ஜனநாய கூட்டணியில் இருந்து விலகிக்கொள்ள உள்ளது என பலதரப்பில் இருந்தும் அறிவிப்புக்கள் குவிந்தவண்ணம் இருக்க, கூட்டணி கட்சிகளை பா.ஜ.க ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என ராஜ்நாத்சிங் அறிவித்துள்ளார்.

இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் மேலும் தெரிவித்ததாவது ; “தேசிய ஜனநாயக கூட்டணியில் பிளவுஏற்பட ஒரு போதும் பா.ஜ.க அனுமதிக்காது. அதோடு கூட்டணிகட்சிகளை சுலபமாக விட்டுக்கொடுப்பது என்பதும் பா.ஜ.க.,வின் இத்தனை வருட வரலாற்றில் இல்லை. நிதீஷ்குமார் மற்றும் சரத்யாதவை சமாதனப்படுத்தும் முயற்சியில் எங்களது கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.” என்று கூறியுள்ளார்.

Leave a Reply