மாப்பிள்ளை மரியாதை என்றால் எல்லோருக்கும் புரியும். எந்தக் குடும்பமாய் இருந்தாலும் சரி, மாப்பிள்ளை என்றால் ஒசத்திதான். ஆனால் பணக்கார குடும்பத்தின் பெண் எடுத்த மாப்பிள்ளைகளின் பெயர்கள் பத்திரிக்கைகளில் அடிபடும்போது அங்கே மரியாதை காணாமல் போகிறது.

இப்படித்தான், சில மாதங்களுக்கு முன், நான்கே ஆண்டுகளில் ரூ.11,000 கோடி அளவுக்கு (கலிபோர்னியாவின் celebritynetworth.com தரும் தகவலின்படி) ரியல் எஸ்டேட் சாம்ராஜ்யம் நிர்மாணித்த ராபர்ட் வதேரா பெயர் வெகுவாக அடிபட்டது. இவர் சோனியா காந்தியின் மருமகன். சோனியா காந்தியை தலைமேல் தூக்கி வைத்துக்கொள்ளும் ஊடகங்கள் கூட அடே அடே, ஊழல் ஒரேடியாக நாறுகிறதே என்று வாக்குமூலம் தரவேண்டியிருந்தது.

வதேராவின் திருவிளையாடல்களை அரவிந்த் கேஜரிவால் அம்பலப்படுத்தியதும் சோனியாவுக்கு சிநேகிதமான ஊடகங்களும் என்னம்மா இது என்கிற தொனியில் புருவங்களை உயர்த்தின. சங்கதி அம்பலமாகி சில மணி நேரத்திலேயே வதேரா நேர்மையாளர் என்று மாமியார் சான்றிதல் கொடுத்து விட்டார்கள். கையோடு தன மாப்பிள்ளைக்கு முட்டு கொடுக்குமாறு கட்சியையும் ஏவிவிட்டார். ஆனாலும் ஊடகங்கள் தொடர்ந்து விவகாரத்தை விசிறிவிட்டுக் கொண்டிருந்தன.

ஏப்ரலில், வதேரா தப்பு ஒன்றும் செய்து விடவில்லை என்று ஹரியானா அரசு சொல்லிவிட்டது. இந்த போலி அத்தாட்சி பத்திரத்தை ஊடகம் துருவுவதற்குள் சிபிஐயும் சட்ட அமைச்சர் அஸ்வினி குமாரும் உச்ச நீதிமன்றத்திற்கு சிபிஐ அளிக்க இருந்த அறிக்கையை திருத்தி மோசடி செய்தது அம்பலமாகி திடுக்கிட வைத்தது. உடனே அதைத் தொடர்ந்து ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சாலின் மருமகனை ரயில்வேயில் உயர் பதவிகளை கூவி விற்றது தொடர்பாக போலீஸ் வளைத்துப் பிடித்தது. இந்த சந்தடியில் வதேரா இருட்டில் மறைந்து விட்டார். அந்த இரண்டு அமைச்சர்களும் ஏகப்பட்ட ஆர்ப்பாட்டத்துடன் தூக்கி எறியப்பட்டார்கள்.

அடுத்து உருள வேண்டியது பிரதமரின் தலைதான் என்ற நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் ஸ்பாட் பிக்சிங் பற்றிய செய்தி வெளியாகியது. அதனால் லட்சம் கோடி கணக்கில் நடந்த முந்தைய ஊழல்கள் ஒவ்வொன்றாக தரை விரிப்புக்கு அடியில் தள்ளப்பட்டன. இந்தமுறை பிடிபட்ட நபர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரது மாப்பிள்ளை. இவர் கிரிக்கெட்டின் போட்டிகளை வைத்து சூதாடுகையில் பிடிபட்டார்.

யார் இந்த நபர்? இந்திய கிரிக்கெட் கண்ட்ரோல் போர்டின் தலைவர் என்.சீனிவாசனின் மாப்பிள்ளை; குருநாத் மெய்யப்பன் என்ற பெயருள்ளவர். இதுவரை இவர் பெயர் வெளி உலகத்திற்கு தெரியாது. ஆனால் ஊடகங்களும் உச்ச நீதிமன்றமும் ஐமுகூ அரசை அடித்துத் துரத்தி காலி செய்யும் நிலை ஏற்பட விடாமல் செய்து விட்டது இவரது கைது.

இவரது விவகாரங்களை புலனாய்வு செய்யும் போலீஸ்காரர்களின் கூற்றுப்படி, இவர் பணம் பண்ணுவதற்காக சூதாடினார் என்பதை விட சூதாட்டத்தில் இழந்த ஒரு கோடி ரூபாயை மீட்பதற்காக தரகர்களிடம் ஐடியா கேட்டு நச்சரித்தார் அவ்வளவுதான்.

இப்போது பாருங்கள், இந்த இரண்டு மாப்பிள்ளைகளும் எங்கே நிற்கிறார்கள் என்று. என்ன குற்றம் செய்தார் என்பது தெளிவாகாத நிலையில் குருநாத் போலீஸ் கஸ்டடியில் இருக்கிறார். இவரது மாமனாரோ தன்னுடைய பதவியைக் காப்பாற்றிக்கொள்ள தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் வதேரா தன்மீது ஊழல் புகார் சொன்னவர்களை, ' சுண்டைக்காய் தேசத்தின் மாங்காய் மனிதர்கள்' என்று கேலி பேசிவிட்டு ராஜநடை போடுகிறார். ஏதோ இந்த தேசத்தின் ஜனாதிபதியும் பிரதமரும் போல உலா வருகிறார். எந்த விமான நிலையத்திலும் இவருக்கு செக்யூரிட்டி சோதனை கிடையாது. இதற்கிடையில் இவரது மாமியாரோ நேர்மையின் மேன்மை பற்றி பிரசங்கம் பண்ணுகிறார். ஊழலை எதிர்த்துப் போராடுவோம் என்று கர்ஜிக்கிறார். அமெரிக்காவிலுள்ள 'கார்ப்பரேட் இன் சைடர்' அமைப்போ இவரது அறிவிக்கப்படாத சொத்து மதிப்பு ரூ.6,500 கோடி (2.19பில்லியன் டாலர்) என்கிறது. நம் ஊடகங்களோ மாமனார் சீனிவாசனை வெட்கம் கெட்டவர் என்று தூற்றுகின்றன. அதே சமயம் போனவாரம் 'போர்ப்ஸ்' பத்திரிகை, உலகின் 9வது சக்தி வாய்ந்த நபர் என்று சோனியாகாந்தியை பட்டியலிட்டபோது அவர் சன்னதியில் குத்தாட்டம் போடுகின்றன. வதேர, குருநாத் என்ற இரண்டு மாப்பிள்ளைகளின் நிலைமைகளை ஒப்பிடுவதற்கு ஒரு முன்னுரை போல இதெல்லாம் வந்து அமைந்தது. ராபர்ட் வதேரா விவகாரத்தை முதலில் பார்ப்போம்:  அதையடுத்து குருநாத் கதையுடன் அதை ஒப்பிடுவோம்.

212 அக்டோபர் 5 அன்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவாலும் பிரசாந்த் பூஷனும் சில சங்கதிகளை விரித்து உதறிப் போட்டார்கள்: தில்லியைச் சுற்றி 31 சொத்துக்களை மாப்பிள்ளை ராபர்ட் வதேரா வங்கிக் குவித்திருக்கிறார். வாங்குகிற நிலையிலேயே அந்த சொத்துக்களின் மதிப்பு ரூ.300 கோடிக்கு மேல், இப்போது 500 கோடியாகிவிட்டது. இத்தனைக்கும் இவர் முதலாளியாக இருக்கும் 5 கம்பெனிகளின் மொத்தத்த முதலீடு வெறும் 50 லட்சம் ரூபாய்தான். இதற்கெல்லாம் கேஜரிவாலும் பிரசாந்த் பூசனும் சரியான ஆதாரங்களையும் முன் வைத்தார்கள். ஹரியானாவிலுள்ள காங்கிரஸ் அரசு டி.எல்.எப் என்ற ரியல் எஸ்டேட் பெரு வர்த்தக நிறுவனத்திகு சாதமாக சில சௌகரியங்களை செய்து கொடுத்ததால் டி.எல்.எப் வதேராவுக்கு தேவையான பணத்தை அள்ளி விட்டிருக்கிறது என்று அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். அதாவது இது ஊழல். அச்சு ஊடகமும் காட்சி ஊடகமும் இந்த விவகாரங்களை எல்லாம் விலாவாரியாக அலசித் தீர்த்ததில் ஆளும் கட்சி வாயடைத்துப் போனது.

தன கட்சிக்காரர்கள் எவரும் வதேராவுக்கு முட்டுகொடுக்க முன்வருவதாக இல்லை என்ற  ராபர்ட் வதேராநிலையில்சோனியா காந்தி தன் மாப்பிள்ளையின் வக்கீலாக மாறினார். களத்தில் இறங்கினார்; ' காந்தி குடும்பத்தையோ அல்லது வேறு எதையுமோ வதேரா துஷ்பிரயோகம் செய்யவில்லை; அவர் ஒரு பிஸினஸ் மேன்; அவரது கொடுக்கல் வாங்கல் எல்லாம் சந்தேகத்துக்கு இடமற்றவை; வெளிப்படையானவை. '('ஜீ நியூஸ்' , 2012, அக்டோபர் 5). அல்ஷேசன் நாய் வளர்ப்பவர்கள் 'சூ' சொல்லி உசுப்பி விட்டு ஏவுவதைப் போல், இவர் வதேரவைக் குறிவைத்த நபர்களை குறி வைக்கச் சொல்லி காங்கிரஸ் கட்சியினரை உசுப்பி விரட்டினார்.

"வதேரா மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்குமாறு காங்கிரஸிற்கு சோனியா காந்தி ஆணை! " இது 2012 அக்டோபர் 5 அன்று என்டிடிவி சொன்ன செய்தி. இதையடுத்து மாங்காய் மனிதர்கள் (ஆம் ஆத்மி கட்சி) மீதும் ஊடகங்கள் மீதும் ஒரு ஓநாய்ப் பட்டாளமே சீறிப் பாய்ந்தது. வதேரா விவகாரம் அம்பலமானதை நாளிதழ்கள் முதல் பக்க செய்தியாக்கிய அக்டோபர் 8 அன்று 'தா ஹிந்து' ஓநாய்களின் பாய்ச்சலை இப்படி சித்தரித்திருந்தது. அன்றைய தினம் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் ஊடகங்களிடம் பொருளாதார சீர்திருத்தங்கள் பற்றியும் ரூபாயின் மதிப்பு உயர்வது பற்றியும் இன்சூரன்ஸ், பென்ஷன் மசோதாக்கள் நாடளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிடும் என்று அரசு உறுதியாக நம்புவது பற்றியும் நிறைய அளந்தார்கள்!

வதேராவுக்கும் தனக்கும் சம்பந்தமே கிடையாது என்று சாதித்துவிட்டது காங்கிரஸ் கட்சி. வதேரா கட்சி உறுப்பினரே அல்ல என்றார்கள். அவர்மீது குற்றம் சாட்டுகிறார்கள் வேண்டுமானால் வழக்கு போட்டுக் கொள்ளட்டும் என்று பேசினார்கள். ஆனால் சோனியா ஆணை பிரப்பித்தப் பிறகு உடனடியாக எல்லாம் தலைகீழாக மாறியது. வதேராவை ஆதரித்துத் தீர்ப்பதில் அமைச்சர்களும் கட்சிப் பிரமுகர்களும் போட்டா போட்டியில் இறங்கி விட்டார்கள். அடுத்த இரண்டே நாட்களில், 'வதேரா மீதான தாக்குதல் வதேரா என்ற தனிநபர் மீதான தாக்குதல் அல்ல; முழு காங்கிரசின் மீதும் அதன் தலைமையின் மீதும் (அதாவது சோனியா மீதும்) குறிவைத்து நடத்தப்பட்ட சதிகாரத் தாக்குதல்' என்றெல்லாம் காங்கிரஸ் பேசியது.

இதற்கிடையில் அக்டோபர் 8ந் தேதி 'சுண்டைக்காய் தேசத்தின் மாங்காய் மனிதர்கள்' வசனத்தை வதேரா டுவிட்டரில் அடித்தார். அக்டோபர் 10ம் தேதி சோனியா காந்தியோ அது வதேராவின் வசனமல்ல வருண் காந்தியின் வசனம் என்று பேசும் அளவிற்குப் போய்விட்டார்!

விரைவிலேயே சோனியா குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக ஐமுகூ தோழமைக்கட்சிகள் காத்தில் இறங்கின. உன்னுடைய குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வழக்கு போட்டுப்பார் என்ற தொனியில் அரவிந்த் கெஜரிவாலுக்கு சவால் விட்டார் சரத்பவார். இதே சரத்பவார் தான் இன்று பேசுகிறார் 'சீனிவாசனே, துளி அளவாவது நேர்மை இருக்குமானால் ராஜினாமா செய்' என்ற தொனியில்! பவார் அவர்களே, சோனியா குடும்ப மாப்பிள்ளை என்றால் உங்கள் பேச்சே வேறுமாதிரி இருக்கிறதே?

"கேவலமான விளம்பரம்" சம்பாதித்துக் கொள்வதற்காகத் தான் வதேராவைக் குறிவைத்தார் கேஜரிவால் என்று லாலுபிரசாத் குற்றம் சாட்டினார். பிரதமர் அலுவலகம் மட்டும் சும்மா இருக்கலாமா என்ன? வதேராவுக்கு ஆதரவாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நவம்பர் 22ம் தேதி வாக்குமூலம் ஒன்றைத் தாக்கல் செய்தது பிரதமர் அலுவலகம்.

வெறும் யூகத்தின் அடிப்படையில் எழும் குற்றச்சாட்டுகளை வைத்து, இரண்டு பேர் செய்து கொள்ளும் கொடுக்கல் வாங்கல் பற்றி கேள்வி எழுப்ப முடியாது; அந்த இருவரும் பரஸ்பர நன்மைக்காக ஊழலில் இறங்கினால் ஒழிய இது நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் அருள்வாக்கு. சரி, இரண்டு தனியார் செய்து கொள்ளும் கொடுக்கல் வாங்கல் என்றால் ஏன் ஆளும் கட்சியும், அமைச்சர்களும் அரசும் வதேராவை ஆதரித்து அணிவகுக்க வேண்டும்? குறிவைக்கப்படுவது தனி நபருக்கு அல்ல, சோனியா காந்திக்கு என்று காங்கிரஸ் பேசுகிறதே அதற்கு என்ன அர்த்தம்?

ஊடகங்களின் ஒரு பகுதிதான் இன்றளவும் இந்தப் பிரச்சினையை ஆறிப் போகாமல் பார்த்துக்கொள்கிறது. 'லைவ் மின்ட் ஆன்லைன்' இந்த மோசடி பற்றி ஒரு 38 பக்க தொகுப்பு வெளியிட்டது. வதேரா விவகாரத்தை 2012 அக்டோபர் 22 இதழில் 'இந்தியா டுடே ' விரிவாக வெளிச்சம் போட்டு காட்டியது. வதேரா 7.5 கோடி ரூபாய்க்கு வாங்கிய சொத்து ஒன்றை டி.எல்.எப் நிறுவனத்துக்கு ரூ.58 கோடிக்கு விற்றதை முன்னதாக அக்டோபர் 15 அன்று வதேராவின் விவகாரங்களை கவனிக்கும் ஐ ஏ எஸ் அதிகாரி வேறு துறைக்கு தூக்கியடிக்கப்பார். இது அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை அல்ல என்று பேசினார் முதலமைச்சர் ஹூடா. ஓஹோ, அப்படியானால் அவர் மேல் கருணையோ? இந்த விவகாரத்தால் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. இதற்கு சற்று முன்னதாக அக்டோபர் 19 அன்று 'டி என் ஏ' பத்திரிகை வதேரா பற்றிய இன்னொரு விவகாரத்தை வெளியில் எடுத்துப்போட்டது; 2009-11ல் ராஜஸ்தான் கிராமம் ஒன்றில் வதேரா 770 ஹெக்டேர் நிலத்தை சந்தை விலை போல இரண்டு மடங்கு விலை கொடுத்து வாங்கிப்போட்டார்; அங்கே அரசு சில பணி திட்டங்களை துவக்க இருக்கிறது என்று உல் விவரம் தெரிந்து கொண்டு இப்படி செய்தார்; இதன்விளைவாக அந்த நிலத்தின் மதிப்பு வதேரா கொடுத்ததைப் போல 40 மடங்கு எகிறியது. இதுதான் அந்த செய்தி. 'ராபர்ட் வதேராவிடம் பறிபோன ராஜஸ்தான் கிராமத்தின் கதை' என்று பிசினஸ் ஸ்டாண்டர்ட் பத்திரிகை 2013 மார்ச் 9 அன்று ஒரு புலனாய்வு அம்பலம் தாங்கி வெளிவந்தது. அங்கே வதேரா நிலம் வாங்கியதில் அடித்த கொள்ளை லாபம் பற்றி அந்த செய்தி பேசியது. 2013 ஏப்ரல் 22 அன்று ஹரியானா அரசு வதேரா மீது உள்ள குற்றச்சாட்டுக்களை எல்லாம் கழுவி, புனிதராக மகுடம் சூட்டியது.

இன்று கிரிக்கெட் சூதாட்ட ஊழல் புகார் பத்திரிக்கைகளின் தலைப்புச் செய்தி வெளியாகியுள்ளது. இது போல அடுத்து அடுத்து ஊழல் புகார்கள் வர வர, வதேரா நேர்மையான பிசினஸ் மேனாக பவனி வருகிறார். சோனியா காந்தியோ திருமதி பரிசுத்தம் என்று அரசியல் வளாகத்தில் உலா வருகிறார்.

வதேரா அடித்த கொள்ளையோடு ஒப்பிடும்போது குருநாத் விவகாரம் வெறும் சில்லறைத் திருட்டு. ஆனால் குருநாத்தின் தலைஎழுத்து சரியில்லை. வதேராவுக்கு தலையெழுத்தும் சரியாக இருந்தது. மாமியார் வீடும் பசையான இடம். அதாவது எந்த வீட்டிலிருந்து பெண் எடுக்கவேண்டுமென்பது வதேராவுக்கு அத்துப்படி.

முத்தாய்ப்பு: 'தவறான' வழியில் பணம் பண்ணி பிரபலமான மாப்பிள்ளை ஆக நினைக்கும் நபர்கள் 'சரியான' வீட்டிலிருந்து பெண் எடுக்க வேண்டும்.

நன்றி; எஸ் . குருமூர்த்தி

Leave a Reply