பா.ஜ.க., கூட்டணியிலிருந்து விலகினால் அதற்கான விலை மிகவும் அதிகம்  பா.ஜ.க., கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதாதளம் விலகினால் அதற்கானவிலையை பீகார் அரசு தர வேண்டி இருக்கும் என்று பா.ஜ.க., முன்னணி தலைவர் அருண்ஜெட்லி எச்சரித்துள்ளார் .

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; , பா.ஜ.க., உடனான அரசியல் மற்றும் சமூககூட்டணியின் காரணமாகவே கடந்த 7 வருடங்களில் பீகாரில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்ப்பட்டது . தற்போது கூட்டணியிலிருந்து விலகினால் அதற்கான மோசமானவிளைவை பீகார் எதிர்கொள்ளவேண்டி இருக்கும். 3வது அணி அது ஒரு தோல்வியடையும் யோசனை . இந்த யோசனை தோல்வியடைவதை ஏற்கனவே 3 ,4 முறை பார்த்துவிட்டோம் என்றார்.

Leave a Reply