பா.ஜ.க பொதுக்கூட்டத்துக்கு இடைஞ்சல் தரும் ஐக்கிய ஜனதா தளம் பா.ஜ.க தேசியத் தலைவர் ராஜ்நாத்சிங் பங்கேற்கும் கூட்டத்தை பள்ளிமைதானத்தில் நடத்த மாநில கல்வித்துறை அனுமதி மறுத்ததைதொடர்ந்து அந்த கூட்டத்தை சஞ்சய்காந்தி மைதானத்தில் நடத்த அக்கட்சி முடிவுசெய்துள்ளது.

பிகார் மாநிலத்தலைநகர் பாட்னாவில் மில்லர்பள்ளி மைதானத்தில் ராஜ்நாத்சிங் கலந்துகொள்ளும் பொதுக் கூட்டத்தை நடத்த மாநில கல்வித்துறையிடம் பா.ஜ.க அனுமதிகோரியது.

ஆனால், அதற்கு கல்வித் துறை மறுப்பு தெரிவித்து விட்டது. பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிடம் கருத்து வேறுபாட்டில் இருக்கும் நிதீஷ் குமார் வேண்டும் என்றே இந்த கூட்டத்தை நடத்த அனுமதி தராமல் தடுத்துள்ளார். ஏனெனில் இதற்க்கு முன்பு முதல்வர் நிதீஷ்குமார் பங்கேற்ற கூட்டமொன்று, அப்பள்ளி வளாகத்தில் ஏற்க்கனவே நடந்துள்ளது . .

இந்நிலையில், இது குறித்து விவாதித்த மாநில பா.ஜ.க தலைவர்கள், கூட்டத்தை வேறுஇடத்தில் நடத்த முடிவுசெய்துள்ளனர்.

இதுதொடர்பாக பா.ஜ.க மாநில தலைவர் மங்கள்பாண்டே சனிக்கிழமை கூறியதாவது:÷””வரும் 23ம் தேதி ராஜ்நாத்சிங் தலைமையில் நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தை கார்தானி பாகில் உள்ள சஞ்சய்காந்தி மைதானத்தில் நடத்த முடிவுசெய்துள்ளோம்’ என்றார்.

Leave a Reply