பொதுத் தேர்தலுக்கு பிறகு அனைவரும் பாஜக.வுடன் கைகோர்க்கும் நிலைவரும் பாஜக.வுக்கு என்றும் நிலையான ஆதரவை தருவோம். மக்களவை பொதுத் தேர்தலுக்கு பிறகு அனைவரும் பாஜக.வுடன் கைகோர்க்கும் நிலைவரும் என்று பஞ்சாப் முதல்வரும், சிரோமணி அகாலி தளம் கட்சி தலைவருமான பிரகாஷ்சிங் பாதல் கருத்து தெரிவித்துள்ளார்

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:

பாஜக.வின் பின்னால் அகாலிதளம் உறுதியாக நிற்கும். மக்களவை பொதுத் தேர்தலுக்கு பிறகு அனைவரும் பாஜக.வுடன் கைகோர்க்கும் நிலைவரும். ஐக்கிய ஜனதாதளம் கட்சி கூட தேர்தலுக்கு பின் மீண்டும் பாஜக.வை நாடிவருவர். உண்மையான கூட்டணி தேர்தலுக்கு பிறகே உருவாகும். தேர்தலுக்கு பிறகு பாஜக. தனிப் பெரும் கட்சியாக உருவெடுக்கும். காங்கிரஸ் கட்சியை வாக்காளர்கள் நிராகரித்துவிடுவர். மூன்றாவது அணி அமைவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை.

பாஜக.வுடன், அகாலிதளம் உறுதியாக உள்ளது. பிரசார குழுத்தலைவராக யாரை வேண்டுமானாலும் பாஜக. நியமிக்கலாம். அது அவர்களது உள்கட்சிவிவகாரம். நரேந்திரமோடி விவகாரம் தொடர்பாக பிகார் முதல்வர் நிதீஷ் குமாரை சந்திக்கும் திட்டம் ஏதுமில்லை என்றார் பாதல்.

Leave a Reply