நிதிஷ் குமாரின் இரட்டைவேடத்தை, அம்பலப் படுத்துவோம் முதல்வர் நிதிஷ் குமாரின் இரட்டைவேடத்தை, அம்பலப் படுத்துவோம், என்று பீகார் முன்னாள் துணைமுதல்வர், சுஷில் குமார் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுஷில் குமார் மோடி செய்தியாளர்களிடம் மேலும் தெரிவித்ததாவது. இத்தனை வருடங்களாக , நிதிஷூடன் இணைந்திருந்த எங்களை, நாகரிகமாக வெளியேற்றிஇருக்கலாம். தகவலேதெரிவிக்காமல், எங்களின், 11 அமைச்சர்களை பதவிநீக்கம் செய்துள்ளது, நிதிஷின் அராஜகம். குஜராத்முதல்வர் மோடியை, பலமுறை பாராட்டி பேசியுள்ள நிதிஷ், இப்போது, மாற்றிப்பேசுகிறார். அவரின் இரட்டைவேடத்தை அம்பலப்படுத்துவோம். அவர் எப்போதெல்லாம், மோடியை பாராட்டிபேசினார் என்பது குறித்த சிடி ஆதாரங்களை சேகரித்துவருகிறோம்.. பீகாரின் பட்டி, தொட்டியெல்லாம், அந்த, சிடியை போட்டுக் காட்டுவோம் என்று அவர் கூறினார்.

Leave a Reply