தமிழகத்தில் பாஜக.,வை வலுப்படுத்த  நரேந்திர மோடி விரைவில் சுற்றுப் பயணம்  தமிழகத்தில் பாஜக.,வை வலுப்படுத்த குஜராத்முதல்வர் நரேந்திர மோடி விரைவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார் என்று அக்கட்சியின் அகிலஇந்திய பொதுச் செயலாளர் முரளிதர ராவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் மேலும் அவர் தெரிவித்ததாவது ; கோவாவில் நடந்த கட்சியின் தேசியசெயற்குழு கூட்டத்தில் எடுத்த முடிவின் படி லோக்சபாதேர்தலை சந்திக்க கட்சி தயாராகிவருகிறது. காங்கிரஸ் ஊழல் நிறைந்த கட்சியாக உருமாறி விட்டது. தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்த குஜராத்முதல்வர் நரேந்திர மோடி நாடுமுழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். கட்சியை வலுப்படுத்த தமிழகம்முழுவதும் அவர் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். கோவையில் வரும் ஆகஸ்ட் மாதத்தில் இளைஞர்கள் எழுச்சிமாநாடு நடைபெற உள்ளது. பாஜக.,வின் உணர்வை புரிந்துகொண்டவர்களும் நல்ல பிரதமர் தேவை என்பதை உணர்ந்தவர்களும் எங்கள் கூட்டணிக்குவரலாம் என்றார் அவர்.

Leave a Reply