பாராளுமன்றதேர்தலில் வெற்றிபெற்று மத்தியில் பா.ஜ.க  ஆட்சி அமைக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற் படையினர் தொடர்ந்து தாக்கிவருவதை கண்டித்து, மீனவர்களுக்கு ஆதரவாக தமிழக கடற் கரையோர மாவட்டங்களில் வரும் செப்டம்பர்  மாதத்தில் பா.ஜ.க மாநாடு நடத்த உள்ளதாக  மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் 

இது குறித்து செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:

சிறுபான்மையின மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை வழங்குவது போல், இந்து சமுகத்தை சேர்ந்த மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும்.

சேதுசமுத்திர திட்டம் தமிழகத்துக்கு தேவையான திட்டம் தான். துரதிருஷ்டவசமாக அத்திட்டம் கிடப்பில்போடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை ராமர்பாலத்துக்கு இடையூறு இன்றி செயல்படுத்தவும், எந்தவகையில் இத்திட்டம் லாபகரமாக அமையும் என்பதையும் கருத்தில் கொண்டு நடைமுறை ப்படுத்தினால் பா.ஜ.க அதற்கு துணைநிற்கும்.

வரும் மக்களவை தேர்தலில் மூன்றாவது அணி அமையவாய்ப்பில்லை. வேலூர்மாவட்ட இளைஞர் அணிசார்பில் ஆகஸ்ட் 3-ந்தேதி வேலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் . வரும் பாராளுமன்றதேர்தலில் வெற்றிபெற்று மத்தியில் பா.ஜ.க  ஆட்சி அமைக்கும். அப்போது தமிழகத்தின்பங்கு அதில் இருக்கும் வகையில் அதிகதொகுதிகளை கைப்பற்றுவோம் என்றார்

Leave a Reply