மதச்சார்பின்மை என்றால் என்னவென்றே தெரியாத கட்சி  ஐக்கிய ஜனதா தளம் மதச்சார்பின்மை என்றால் என்னவென்றே தெரியாத கட்சி ஐக்கிய ஜனதா தளம் என்று சிவசேனா கருத்து தெரிவித்துள்ளது.

இது குறித்து சிவசேனா மேலும் தெரிவித்ததாவது; மதச்சார்பின்மை எனும் அஸ்திரத்தை கையில் எடுத்து ஐக்கிய ஜனதாதளம் கூட்டணியிலிருந்து வெளியேறியதாக கூறுகிறது. மதச் சார்பின்மை என்றால் என்ன என்றே தெரியாத கட்சி, இதைபற்றி பேசலாமா?,காஷ்மீர் பண்டிகளான இந்துக்கள் பலர் சொந்த மாநிலத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்டனர். அப்போது ஐக்கிய ஜனதாதளம் எங்கேசென்றது. அதனைபற்றி வாய் திறக்கவில்லை. இப்போது மதச் சார்பின்மை பற்றி பேசுகின்றனர் என்று உத்தவ் பேசினார்.

Leave a Reply