மோடி காய்ச்சலினால்  அவதிப்படும் நிதீஷ் குமார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார் அடிக்கடி “மோடி’ காய்ச்சலினால் அவதிப்பட்டுவருகிறார் என்று பாஜக பொதுச்செயலாளர் ராஜீவ்பிரதாப் ரூடி கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பற்றிய நிதீஷ் குமாரின் கருத்துகள் முன்னுக்குப்பின் முரணாக உள்ளன.அவருடைய பேச்சிலிருந்து நிதீஷ் குமார் “மோடி’ காய்ச்சலால் அவதிப்பட்டுவருவது தெளிவாக தெரிகிறது. நிதீஷ் குமார் உடனடியாக ஒரு நல்ல மருத்துவரை பார்ப்பது நல்லது. மோடியைப்பார்த்து அவர் ஏன் பயப்படுகிறார்?

தன்னுடைய அரசைக் காப்பாற்றி கொள்ள நிதீஷ் தற்ப்போது காங்கிரஸýடன் புதிதாக காதல் வயப்பட்டிருக் கிறார். தன்னுடைய பதவியை காப்பாற்றுவதற்காக காங்கிரஸிடமும் சுயேச்சைகளிடமும் நிதீஷ் உடன்படிக்கைவைத்தவர். பிகாரில் நிதீஷ் குமாரும் லாலுபிரசாத் யாதவும் ஒரேகுணம் படைத்தவர்கள் என்பதுதான் பாஜகவின் கருத்து. இருவருமே பதவிக்காக எதையும்செய்யக்கூடிய சந்தர்ப்பவாதிகள் என்றார்.

Leave a Reply