அத்வானிதான் பா.ஜ.,வின் முன்னோடி அத்வானிதான் பா.ஜ.,வின் முன்னோடி என்று கட்சி தலைவர் ராஜ்பாத்சிங் தெரிவித்துள்ளார். டில்லியில் நடந்த கட்சியின் நிறுவனர் சியாமாபிரசாத் முகர்ஜியின் 61வது ஆண்டு நினைவுதின விழாவில் ராஜ்நாத்சிங் இவ்வாறு தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து பேசிய பா.ஜ.க., முன்னாள் த‌லைவர் வெங்கய்யநாயுடு, பா.ஜ.க.,வின் மிகபெரிய தலைவர் அத்வானி என்று தெரிவித்தார்.

இவ்விழாவில் கலந்தகொண்டது அத்வானி பேசியதாவது; காங்கிரசை தோற்கடிக்க புது நண்பர்கள் தேவை . ஜனசங்கத்தின் முதல்கூட்டத்தில் பேசிய சியாமாபிரசாத் காங்கிரசை தோற்கடிக்க கூட்டணி குறித்துபேசினார். அவரது இந்தகருத்து இன்றைய அரசியல் சூழ்நிலைககு பொருந்துவதாகவே அமைந்துள்ளது என்று அத்வானி கூறினார்.

Leave a Reply