தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக  உத்தவ் தாக்கரேவை  நியமிக்க  வாய்ப்பு தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக சிவசேனை கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவை நியமிக்க பா.ஜ.க. பரிசிளிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணி கடந்த 1999இல் உருவாக்கப்பட்ட போது அதன் ஒருங்கிணைப்பாளராக சமதாகட்சி தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் இருந்தார். அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு தீவிர அரசியலில்இருந்து ஒதுங்கியபின், அப்பொறுப்பை ஐக்கிய ஜனதாதளத் தலைவர் சரத்யாதவ் வகித்துவந்தார். இதனிடையே, பா.ஜ.க.வுடனான வருட காலக்கூட்டணியை அக்கட்சி சமீபத்தில் முறித்துக் கொண்டது. இந்நிலையில் சிவசேனைக் கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்க பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply