உத்தரகண்ட் வெள்ள மீட்புப்பணி சுஷீல்குமார் ஷிண்டே  கருத்து ஏமாற்றம் உத்தரகண்ட் வெள்ள மீட்புப்பணிகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டே தெரிவித்துள்ள கருத்து ஏமாற்றம் தருவதாக பாஜக தெரிவித்துள்ளது.

பாஜக துணைத்தலைவர் முக்தார் அப்பாஸ்நக்வி இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது : இயற்கை சீற்றத்தினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மக்களுக்குத் தேவை உடனடியான உதவிதானே தவிர வெறும் வாய்வார்த்தைகள் அல்ல. மீட்புப்பணிகளில் அரசு அமைப்புகளிடையே ஒருங்கிணைப்பு இல்லை என ஷிண்டே கூறியிருப்பது பெரும் ஏமாற்றத்தை தருகிறது.

தற்ப்போது மத்தியில் ஆட்சியில்இருப்பதும் காங்கிரஸ் கூட்டணி தான். மாநிலத்தை ஆள்வதும் காங்கிரஸ்தான். இந்நிலையில் இவர்களுக்குள் ஒருங்கிணைப்பு இல்லை என்றால் யாரைக் குற்றம்சொல்வது?

மீட்புப்பணிகளை மேற்கொள்ளும் விஷயத்தில் மாநில அரசைக் குறைகூறுவதை விட்டுவிட்டு, ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை மத்தியஅரசு மேற்கொள்ளவேண்டும். வெள்ளத்தில்சிக்கியுள்ள மக்களில் பலர் பட்டினியால் உயிரிழந்துள்ளனர். இந்தப்பிரச்னையை அரசு கவனிக்காமல் விட்டு விட்டது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்று பா.ஜ.க.,வினருக்கு தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் உத்தரவிட்டுள்ளார் என்றார்.

Tags:

Leave a Reply