பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு பிரதமராகும் கனவு உள்ளதாக பா.ஜ.க,வின் முன்னாள் தலைவர் கட்காரி கருத்து தெரிவித்துள்ளார்.

பீகார்மாநிலம் பொக்காரோவில் நடந்த நிகழ்‌ச்சி ஒன்றி்ல் கலந்துகொண்ட பா.ஜ.க., முன்னாள் தலைவர் நிதின்கட்காரி செய்தியாளர்களிடம் மேலும் தெரிவித்ததாவது ; நிதிஷ் குமார் சிறுபான்மையினரை கவர்வதற்காக வாக்குவங்கி அரசியல் நடத்திவருகிறார். பிரதமராக கனவு ‌‌காண்கிறார்.

குஜராத் பா.ஜ.,க அரசை நிதிஷ் குமார் குற்றம் சாட்டுகிறார். ஆனால் அங்கு சிறப்பாக ஆட்சி நடைபெற்று வருகிறது என கட்‌காரி கூறினார்.

Leave a Reply