பக்திகோஷங்கள் முழங்க எப்போதும் பரபரப்பாககாணப்படும் கேதார்நாத் , இப்போது பேரழிவு நகரமாக காட்சி அளிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன . வெள்ளம்வடிந்து கோவில் பாதிக்கப்படாமல் அப்படியே உள்ளது. ஆனால், கோவிலின் வெளிப்புறவாயிலில் சடலங்கள் குவிந்துகிடக்கின்றன. இதனால்,கேதார்நாத் நகரம் பேய்நகரம் போல் காட்சி அளிப்பதாக மீட்புபணியில் ஈடுபட்டுள்ள குழுவினர் வேதனை தெரிவித்தனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்துவரும் தொடர்மழையால் பேரழிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில்சிக்கி ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். சாப்பாடு இல்லாமல் காட்டில்தவிக்கும் பல்லாயிரக் கணக்கான யாத்ரீகர்களை மீட்கும்பணிகள் நடைபெற்று வருகின்றன.

கேதார்நாத் நகரில் பெரும்சேதம் ஏற்பட்டுள்ளது. மலையிலிருந்து அடித்துவரப்பட்ட பாறைகள் மோதியதில் பெரும்பாலான கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன. நகரெங்கும் பிண குவியல்குவியலாக கிடக்கிறது. திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கிய பலர் கோயிலுக்குள் தஞ்சம்புக முயன்றுள்ளனர். அவர்களில் பலரது சடலங்கள் கோயில்வாசலிலேயே இன்னமும் கிடக்கிறது. உயிரோடு உள்ளவர்களை மீட்கும்பணி நடப்பதால் சடலங்களை ராணுவத்தினர் இன்னும் மீட்கவில்லை. சடலங்கள் அழுகிவிட்டதால் துர் நாற்றம் வீசுகிறது.

கரைபுரண்டு ஓடிய காட்டாற்றுவெள்ளம் நகருக்குள் நுழைந்து அதன்பாதையில் உள்ள அனைத்தையும் அழித்து விட்டது. இவ்வளவு அழிந்தும் அப்பகுதியில் உள்ள செல்போன்கோபுரங்கள் அப்படியே இருக்கின்றன. ஆனால் அங்குதவிக்கும் மக்கள் தங்கள் செல்போனை சார்ஜ்செய்ய மின்சாரம் இல்லாததால், உறவினர்களுக்கு தகவல்தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.அப்பகுதியில் விமானப் படையினர் ஏற்கனவே மீட்புப்பணிகளை தொடங்கியுள்ளனர்.அதேசமயம் உத்தரகாண்டில் மீட்புபணியில் ஈடுபட்டுள்ள அரசு அமைப்புகளுக்கு இடையே போதுமான ஒருங்கிணைப்பு இல்லை என்றும் மாநிலத்தின் பல்வேறுபகுதிகளில் இன்னும் 40 ஆயிரம் மக்கள் சிக்கியுள்ளனர் என்றும் அவர்களை மீட்க போர்க்கால அடிப்படையில் பணிகள்நடக்கின்றன என்றும் தகவல் வந்துள்ளது.

Leave a Reply