ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தனியார்தொலைக்காட்சி ஏற்பாடுசெய்திருந்த சிறுபான்மையினர் சந்திக்கும் பிரச்சினைகள் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாரதீய ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங் பேசினார்.

அப்போது கோத்ராகலவரம் குறித்து ராஜ்நாத்சிங் கூறியதாவது:-

2002 ஆண்டு குஜராத் கோத்ரா ரெயில்எரிப்பு சம்பவத்திற்குபிறகு நாட்டில் 13,000 மதக் கலவரங்கள் நடந்து இருக்கின்றன. ஆனால் அவைகளை நாம் மறந்துதான் இருக்கிறோம். ராஜஸ்தானில் பாரதீய ஜனதாவின் பைரோன்சிங் ஷெகாவாத், வசுந்தர ராஜேசிந்தியா ஆகியோர் ஆட்சியில், மைனாரிட்டிக்கு எதிராக எந்தபாகுபாடுகளும் நடந்து இருக்கவில்லை.

எங்களுடைய வார்த்தைகளிலும் செயல்களிலும் எந்தவேறுபாடும் இல்லையென்கிற நம்பிக்கையை உங்களுக்கு ஊட்டவே நான்விரும்புகிறேன். பிரிட்டிஷ் ஆட்சியில் பிரித்து ஆளும் கொள்கையை கடைபிடித்தனர். ஆனால் சுதந்திரம்பெற்று 66 ஆண்டுகள் அகியும் இன்னும் இந்து முஸ்லிம்களுக்கிடையே உள்ள அந்த இடைவெளியை நாம் சரி செய்யவில்லை.

பாரதீயஜனதா ஆளும் மாநிலங்களில் மதத்திற்கு எதிராக எதேனும்பாரபட்சம் இருக்குமானால் என்னை அணுக மக்களை கேட்டுக் கொள்கிறேன். இல்லையேல் எனக்கு எழுதுங்கள். நான் பதில்தருகிறேன். அந்தபிரச்சினையை தீர்க்க முயற்சிக்கிறேன்.

நாட்டையும், சமுதாயத்தையும் அறிவுள்ளதாக மாற்றவேண்டியது இப்போது மிகமிக முக்கியம். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும்நோக்கில் கட்சிகள் உண்மையான அரசியல் செய்து கொண்டிருக்கவில்லை. அன்பால், பாசத்தால் முஸ்லிம்களான உங்கள்மனதில் இடம் பிடிக்கவே நாங்கள் முயன்று கொண்டிருக்கிறோம். பயத்தால் அல்ல.

உங்களிடத்தில் நம்பிக்கையைவளர்க்கவே நாங்கள் விரும்புகிறோம். எனவே கோத்ராகலவரத்தை தவிர்க்க உங்களை வேண்டிக்கொள்கிறேன். என்று அவர் கூறினார்.

Leave a Reply