பாஜக.,வின்  சிறைநிரப்பும் போராட்டம்  ஒத்திவைப்பு உத்தரகாண்ட் மாநிலத்தில், மழை, வெள்ளத்தினால் ஏராளமான உயிரிழப்புகளும், பொருள்சேதமும் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து , கடந்த, 19ம் தேதி முதல், நாடுதழுவிய அளவில் நடத்திவந்த, சிறைநிரப்பும் போராட்டத்தை, பா.ஜ.க., ஒத்திவைத்துள்ளது.

பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான, ஐ.மு. கூட்டணி அரசின் ஊழல்களுக்கு எதிராக, வரும், 30ம்தேதி வரை, இந்த சிறைநிரப்பும் போராட்டம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் தற்போது, உத்தரகண்டில், மழை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உதவும்பணிகளை, பா.ஜ., வினர் மேற்கொள்ளவேண்டும் என்பதால், போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, தேசிய தலைவர், ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

Leave a Reply