தமிழகம் பாஜக.வின் கோட்டையாக மாறும்காலம் விரைவில்வரும் தமிழகம் பாஜக.வின் கோட்டையாக மாறும்காலம் விரைவில்வரும் என பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னை புரசைவாக்கம் பகுதி திமுக. நிர்வாகி விஎஸ்.ஜெ.சீனிவாசன் தலைமையில் நூற்றுக்கும் அதிகமானோர் மற்றும் வ.உ.சிதம்பரனாரின் பேரன் வஉ.சி.வ.சிதம்ரம் ஆகியோர் பாஜக.வில் இணையும்நிகழ்ச்சி சென்னை பாஜக மாநிலத் தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.

கட்சியின் மாநிலத்தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் அவர்கள் அனைவரும் பாஜக.வில் சேர்ந்தனர். அவர்களை வரவேற்று பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது: பாஜக.வினர் தங்களின் ஒரு கொடிக்கம்பத்தை நடுவதற்கான இடத்தைக்கூட தமிழ்நாட்டில் தரமுடியாது என்று திராவிட இயக்கத்தலைவர்கள் பேசிய ஒருகாலம் உண்டு. ஆனால் அவ்வாறு எந்தத்தலைவர் பேசினாரோ, அவர் தலைமையிலான கட்சியிலிருந்தே விலகி இன்று சீனிவாசன் தலைமையில் நூற்றுக் கணக்கானோர் தங்களை பாஜக.வில் இணைத்துக்கொண்டுள்ளனர்.

அதேபோன்று கப்பலோட்டிய தமிழன் என்று இந்தியமக்களால் புகழப்படும் வ.உ.சிதம்பரனாரின் பேரன் வ.உ சி.வ.சிதம்பரம் இன்று பாஜக.வில் இணைந்துள்ளார். இவையனைத்தும் மிகவும் முக்கியத்துவம்வாய்ந்த நிகழ்வுகள். பல்வேறு சவால்களைக் கடந்து இன்று தமிழ்நாட்டில் பாஜக. வளர்ந்துவருகிறது என்பதை இவைகாட்டுகின்றன. தமிழகம் பாஜக.வின் கோட்டையாக மாறும்காலம் விரைவிலேயே வரும் என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.

Leave a Reply