காங்கிரஸ்க்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு மதச் சார்பின்மை நோய் உருவாகியுள்ளது என்று பா.ஜ.க தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.

மதச் சார்பின்மை, மதவாதம் என பேசி நாட்டைத்துண்டாட காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முயற்சி செய்கின்றன என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

பிகார் தலைநகர் பாட்னாவில்

ராஜ்நாத்சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது; மதவாதத்துக்கு எதிராக மதச் சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைப்பதாக காங்கிரஸ் கூறிவருகிறது. தங்கள் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப காங்கிரஸ் மேற்கொள்ளும் தந்திரம் இது.

மூளை வீக்கநோய் மிகவும் மோசமானது. இதை போன்று மதச் சார்பின்மை என்பதும் ஒருநோயாக மாறிவிட்டது. காங்கிரசையும் அதன் கூட்டணி கட்சிகளையும் இந்தநோய் கடுமையாக தாக்கியுள்ளது. இதனால் தான் மதச்சார்பின்மை, மதவாதம் என பேசி நாட்டைத்துண்டாக்க நினைக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் சதி வலையில் பிகார் முதல்வர் நிதீஷ்குமார் விழுந்துவிடக் கூடாது.

கடந்த பல ஆண்டுகளாகவே மோடியை காங்கிரஸ்கட்சி குறிவைத்து தாக்கிவருகிறது. முக்கியமாக குஜராத்தில் கலவரம், என்கவுன்ட்டர் என குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்கள். என்கவுன்ட்டர் நிகழாதமாநிலம் எது என்று கூறமுடியுமா ? சுதந்திரத்துக்குப்பின் நமது நாட்டில் 13,900 கலவரங்கள் நிகழ்ந்துள்ளன. 1984-ல் இந்திராகாந்தி கொலைக்கு பிறகு சீக்கியர்களுக்கு எதிராக காங்கிரஸ்மேற்கொண்ட வன்முறையும் இதில் அடக்கம். ஆனால் குஜராத்கலவரத்தை மட்டும் அதிகம்பேசி வருகின்றனர். நாட்டில் வேறு எந்த அரசியல்தலைவரும் எதிர்கொள்ளாத எதிர்ப்புகளையும், வசைமொழிகளையும் மோடி எதிர்கொண்டு வருகிறார். குஜராத்மக்களே கலவரத்தை மறந்து அமைதியாக வாழ்ந்துவருகின்றனர் என்றார்.

பாஜக கூட்டணியின் பிரதமர்வேட்பாளராக மோடி முன்னிறுத்தப்படுவார் என்பதால்தான் கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதாதளம் விலகியுள்ளதா? என்ற கேள்விக்கு, “பிரதமர் வேட்பாளர் குறித்து முடிவெடுப்பதில் பாஜகவுக்கு எந்த தயக்கமும் இல்லை. அப்படி முடிவு எடுக்கும் போது கண்டிப்பாக அனைவருக்கும் தகவல்தெரிவிக்கப்படும். மோடியின் சேவை நாட்டுக்குத்தேவை என்று 10 ஆண்டுகளுக்கு முன்பே நிதீஷ்குமார் பேசியுள்ளார். அவரது ஐக்கிய ஜனதாதளம் கட்சி கூட்டணியில் இருந்து விலகியதால் நாங்கள் பலம் இழந்துவிடவில்லை’ என்று ராஜ்நாத்சிங் பதிலளித்தார்.

“நாட்டில் உள்ள அனைவரும் எந்த வித வேறுபாடும் இன்றி சரிசமமாக நடத்தப்படவேண்டும் என்பதில் பா.ஜ.க உறுதியாக உள்ளது. முஸ்லிம்கள் எங்கள்கட்சிக்கு வாக்களிக்கவேண்டும் என்றுதான் விரும்புகிறோம்’ என்றும் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

Leave a Reply