அரசின் தோல்வியால் தீவிரவாத நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் அருகே ராணுவவீரர்களை குறிவைத்து ஹிஸ்புல் முஜாகதீன் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 பேர்வரை கொல்லப்பட்டனர். 19 பேர் படுகாயமடைந்தனர். அரசின்தோல்வியால் தீவிரவாத நடவடிக்கைகள் அதிகரித்துவருவதாக என்று பாஜக குற்றம் சுமத்தியுள்ளது.

இதுதொடர்பாக பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் கூறியதாவது:-

தீவிரவாதிகளின் மன உறுதி தொடர்ந்து வளர்ச்சி யடைகிறது. தீவிரவாதத்திற்கு எதிராக வலுவானநடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு உறுதி மொழி அளிக்கிறது. ஆனால், உண்மையில் தீவிரவாத நடவடிக்கையை கட்டுப்படுத்த தவறி விட்டது.

தீவிரவாத மற்றும் மாவோயிஸ்ட்களின் பின்னணி நடவடிக்கைகளை கருதி, அவற்றுக்கு எதிராக மத்தியஅரசு மென்மையான போக்கை கையாள்கிறது. இந்தசவாலை ஏற்று உறுதியான நம்பிக்கையுடன் மன்மோகன்சிங் அரசு போராடவேண்டும்.

தீவிரவாதத்திற்கு எதிரானபோராட்டத்தில் அரசுக்கு பா.ஜ.க முழு ஒத்துழைப்பையும் வழங்கும். இந்தவிஷயத்தில் அரசியலை புகுத்தவிரும்பவில்லை. எனவே, உள்நாட்டு பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை போக்க அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று அவர் கூறினார்.

Leave a Reply