வேறும்மிரட்டல் வேண்டாம்; தைரியமாக பேசுங்கள் என நிதீஷ்குமாருக்கு பாஜக செய்தித்தொடர்பாளர் சையது ஷா நவாஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

பா.ஜ.க கூட்டணியில் நீண்ட காலம் இருந்த நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் சமீபத்தில் கூட்டணியில் இருந்துவிலகியது. இந்நிலையில், “எனக்கு தெரிந்ததையெல்லாம் வெளியிட்டால் பா.ஜ.க.,வினர் சிக்கலில் மாட்டிக்கொள்வார்கள்’ என பிகார் முதல்வர் நிதீஷ் குமார் சமிபத்தில் மிரட்டினார் .

இதற்கு பதிலளிக்கும்வகையில், பாஜக செய்தித்தொடர்பாளர் சையது ஷா நவாஸ் ஹுசேன், செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: பா.ஜ.க தலைவர்களுக்கு எதிராக குறிப்பாக பிகாரில் உள்ள பா.ஜ.க தலைவர்களை மிரட்டும்வகையில் நிதீஷ் பேசிவருகிறார். இப்படிப்பேசுவதை நிறுத்திவிட்டு, அவருக்கு தெரிந்ததை தைரியமாக பேசலாம். தன்னை முன்னிலைப்படுத்தி கொள்ளவதற்காகவே நிதீஷ் இப்படி பேசிவருகிறார்.

காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பதற்கும், அவர்களின் ஆதரவைப்பெறுவதற்கும் அனைத்து வகையிலும் நிதீஷ் தயாராகிவருகிறார். சோனியாகாந்தி, ராகுல்காந்தி தலைமையை ஏற்றுக்கொள்வது அவருக்கு நல்லதல்ல என்றார் ஷாநவாஸ் ஹுசேன்.

Tags:

Leave a Reply