ராஜ்யசபா தேர்தலும்  கருணாநிதியின் ராஜதந்திரமும்  ராஜ்யசபா தேர்தலில் காங்கிரசை வீழ்த்தி கனிமொழியை காப்பாற்றிய கருணாநிதியின் ராஜதந்திரம். தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப் படவேண்டிய ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான தேர்தலுக்கான… வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட ஜூன் 17ந்தேதி..யிலிருந்து இன்றுவரை .. திமுக—தேமுதிக—காங்—கட்சிகளிடையே நடக்கும் "குதிரை பேரம்"—ஊடகங்களில் பத்திரிக்கைகளில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது..

1.அதிருப்தி தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் யாருக்கு வாக்களிப்பார்கள்?

2.மனித நேய மக்கள் கட்சியின் ஜவஹருல்லா, புதிய தமிழகம் கிருஷ்ணசாமியின் ஆதரவுக்கு, திமுக கொடுத்த விலை எத்தனை கோடி?

3—.2014 பாரளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு காங்கிரஸ் யார் பக்கம் சாயும் –திமுக பக்கமா?—தேமுதிக பக்கமா?

4.வாக்களித்த பின் ஓட்டுசீட்டை கட்சியின் அதிகார பூர்வ ஏஜண்டிடம் காண்பிக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் புதிய நடை முறையால் அதிமுகவின் உபரி ஓட்டுக்கள் சிதறிப்போகுமா?.

.

இந்த கேள்விகளில் எண்.1 மற்றும் 4 .க்கு பதில் தேர்தல் முடிந்தவுடந்தான் தெரியும்

எண் 2 க்கு பதில் சொன்னால்..அதை படிப்பவர்கள் அனவரும் "மயக்கம் போட்டு விழுந்து விடுவர்" அதனால் சொல்லப்போவதில்லை..

எண்-3- க்கு பதில தான் இன்றைய தலைப்பு..

இறுதியாக கருணாநிதியின் ராஜதந்திரம் வெற்றி பெற்றுவிட்டது..மகள் கனிமொழிக்காக அவர் நகர்த்திய காய்களில் காங்கிரஸ் வெட்டுப்பட்டுவிட்டது..

இது ராஜதந்திரத்தின் வெற்றியா? அல்லது சிவப்பு நோட்டில் சிரித்துக்கொண்டிருக்கும் "மகாத்மா காந்தியின்" வெற்றியா?

சோனியாவுக்கும், கருணாநிதிக்குமே தெரித ரகசியம் இது..

நாம் தெரிந்துகொள்ள நினைத்தால்.."சிறு பிள்ளத்தனம்"—என்பார் கலைஞர்

நன்றி ; எஸ்.ஆர். சேகர் எம்.ஏ.பி.எல்

பாஜக மாநிலப் பொருளாளர்

Leave a Reply