லோக்சபா தேர்தலுக்கான செயல்திட்டங்கள் குறித்து, மகாராஷ்டிராவில் நரேந்திரமோடி ஆலோசனை அடுத்த லோக்சபா தேர்தலுக்கான செயல்திட்டங்கள் குறித்து, மகாராஷ்டிராவில் பா.ஜ.க., தலைவர்களுடன், குஜராத் முதல்வர், நரேந்திரமோடி நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், காங்கிரசின் ஊழல்களை அம்பலப்படுத்துங்கள்; பலமாநிலங்களில், பா.ஜ.க., தந்துள்ள நல்லாட்சிபற்றி மக்களிடம் எடுத்துக்கூறுங்கள் என்று கட்சியினரை, முதல்வர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

லோக்சபா தேர்தலுக்கான கட்சியின், தேர்தல் பிரசாரகுழு தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக மும்பை வந்த நரேந்திரமோடி, அங்கு, மகாராஷ்டிரா பாஜக., தலைவர்களுடன், லோக்சபா தேர்தலுக்கான, கட்சியின் செயல்திட்டங்கள் குறித்து, ஆலோசனை மேற்க்கொண்டார் இதில் மகாராஷ்டிராவின் தற்போதைய அரசியல்நிலவரம், கட்சியின் அமைப்புரீதியான விஷயங்கள், சிவசேனா கட்சி உடனான கூட்டணி உள்ளிட்ட , பலவிஷயங்கள் குறித்து, முதல்வர் நரேந்திரமோடி ஆலோசித்தார்; கட்சித் தலைவர்களின் கருத்துகளை கேட்டறிந்தார்.ஓட்டுப்போடும் மக்களின் நலனில் அக்கறைகொண்ட கட்சியாக, பா.ஜ., செயல்படவேண்டும். மத்தியிலும் , மாநிலத்திலும், ஆட்சியில் உள்ள காங்கிரசின் ஊழல்களை, மக்களிடம் அம்பலப்படுத்தவேண்டும். பலமாநிலங்களில், ஆட்சியில் உள்ள, பா.ஜ.க, தரும் நல்லாட்சி குறித்து மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று கூட்டத்தில் அவர் பேசினார் .

Leave a Reply