நரேந்திர மோடியின் தலைமையில் பா.ஜ.க மிகப் பெரிய வெற்றியைகாணும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் தலைமையில் பா.ஜ.க மிகப் பெரிய வெற்றியைகாணும் என்று எடியூரப்பா கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது ; பாஜக.,வில் மீண்டும் இணையும் எண்ணமில்லை எதிர்வரும் மக்களவைதேர்தலை சந்திப்பது குறித்து தற்போது ஆலோசனை செய்துவருகிறேன். எல்லாகட்சிகளும் கூட்டணி வைத்துக்கொள்வது அரசியலில் சாதாரணம். தேசியகட்சிகள், மாநில கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொள்வது வழக்கம். மக்களவை தேர்தலில் நாங்களும் கூட்டணி வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளோம். அது யாருடன் என்பதை தற்போது கூற இயலாது .

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீது மிகுந்த மரியாதை மதிப்பு வைத்துள்ளேன். அண்மையில் அவரை பா,ஜ,க பிரசாரக் குழு தலைவராக அறிவித்துள்ளனர். அவரது தலைமையில் பா.ஜ.க மிகப்பெரிய வெற்றியைகாணும் என்றார் அவர்.

Leave a Reply