உத்தகாண்ட் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தமிழக பா.ஜ.க., சார்பில் நிதி திரட்டும்நிகழ்ச்சியை நாகர்கோவிலில் மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.
நாகர்கோவிலில் கட்சிதொண்டர்கள் பாஜக .,கொடியுடன் வீதிகள்தோறும் சென்று உண்டியல் ஏந்தி நிதிவசூல்செய்தனர். இதனை தொடங்கிவைத்த பொன் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: உத்தரகாண்டில் வெள்ளத்தால் ஏற்பட்டபாதிப்பை பாஜக, தேசியபேரிடராக கருதுகிறது. ஆனால் மத்திய அரசு அதை பேரிடராக அறிவிக்கமறுப்பது வேதனைக் குரியது. 2004 ம் ஆண்டு எப்படி சுனாமி உலகை உலுக்கியதோ அதுபோன்று தான் உத்தரகாண்ட் சம்பவங்கள் உலகை உலுக்கியுள்ளது. இந்தமக்களுக்கு உதவுவதற்காக தமிழக பாஜக., சார்பில் நிதி திரட்டி வழங்கப்படும். தமிழகத்தில் உள்ள முன்னாள் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஒரு மாத சம்பளத்தை வெள்ள நிதியாக வழங்குவார்கள்.
பிறமத மாணவர்களுக்கு வழங்குவது போன்று இந்து ஏழைமாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கவேண்டும் என்று பாஜக., மூன்று ஆண்டுகளாக போராடிவருகிறது. ஜூலை 28-ம் தேதி இதற்காக பா.ஜ.க , இளைஞரணி சார்பில் போராட்டம் நாகர்கோவிலில் நடைபெறுகிறது. தற்போது ராஜ்யசபா தேர்தலுக்காக ஏற்பட்டுள்ள கூட்டணி நிரந்தரமானதல்ல. தேர்தல் வரும்போது இந்த கூட்டணிகளில் பெரும்மாற்றம் வரும். என்று அவர் கூறினார்.