இந்த மாதத்தில் மூன்றாவது முறையாக உயர்த்தப்படும் பெட்ரோல் விலை பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ. 1.80 உயர்த்தப் பட்டுள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் இந்த விலைஉயர்வு அமலுக்கு வந்துள்ளது. இந்தமாதத்தில் மூன்றாவது முறையாக பெட்ரோல்விலை அதிகரித்துள்ளது. உள்ளூர்வரிகள் சேர்த்து சென்னையில் ஒருலிட்டர் பெட்ரோல் விலை ரூ. 2.12 அதிகரித்து ரூ. 71.22 ஆக உயர்ந்துள்ளது .

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின்மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது விலைஉயர்வுக்கு முக்கிய காரணமாகும். முன்னதாக ஜூன் 1 ம் தேதி பெட்ரோல்விலை லிட்டருக்கு 75 காசுகள் உயர்த்தப்பட்டது.

ஜூன் 16ம் தேதி ரூ. 2 உயர்த்தப்பட்டது. தற்போது ரூ. 1.80 உயர்த்தப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply