சிபிஐ தொடர்பாக மத்திய அமைச்சரவையின் முடிவு, குழப்பத்தை உருவாக்கும் சிபிஐ.,யை சுதந்திர அமைப்பாக மாற்றும் வகையிலான , மத்திய அமைச்சரவையின் முடிவு, குழப்பத்தை உருவாக்கும் என்று ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க, மூத்த தலைவரும், ராஜ்யசபா எதிர்கட்சி தலைவருமான அருண்ஜெட்லி இது குறித்து மேலும் தெரிவித்ததாவது: சிபிஐ.,யில் அரசியல் தலையீட்டினை குறைக்கும் வகையில், மத்திய அமைச்சரவை எடுத்துள்ளமுடிவால் எவ்விதபலனும் ஏற்படப் போவதில்லை; மாறாக குழப்பத்தைதான் ஏற்படுத்தும். ஐமு., கூட்டணி அரசு, சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங், பகுஜன் சமாஜ்கட்சி தலைவர் மாயாவதி உள்ளிட்டோர் மீது ஊழல்வழக்கு விசாரணை என்ற பெயரில், சிபிஐ.,யை தவறாக பயன் படுத்துகிறது. சிபிஐ.,யின் செயல் பாடுகளை கண்காணிக்க, ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கியகுழுவை அமைப்பது, அரசியல் ரீதியாக சிபிஐ.,யை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது போன்று ஆகும்.

இந்த நடவடிக்கையை அனைவரும் எதிர்க்கவேண்டும். அரசு தேர்ந்தெடுக்கும், ஓய்வுபெற்ற நீதிபதிகளால் நம்பிக்கையை ஏற்படுத்தமுடியாது. ஓய்வுபெறுவதற்கு முன் அரசுக்கு நெருங்கமாக இருந்தவர்கள்தான், ஓய்வுக்கு பிறகு பதவிபெறுகின்றனர். இவ்வாறு நியமிக்கப்படுபவர்கள் அரசாங்கத்திற்கு விசுவாசமானவர்களாக இருப்பர்.
சிபிஐ., தொடர்பான வழக்கில், சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல்செய்ய இருக்கும் அறிக்கையில், தேர்வுகமிட்டி தெரிவித்த பரிந்துரைகள், ஜனவரி 31ம் தேதி அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவு மற்றும் மற்றகட்சிகள் தெரிவித்த ஆலோசனைகளை முன் வைக்கவேண்டும். அப்போதுதான், அரசியல் தலையீடுகளில் இருந்து சிபிஐ.,யை காக்கமுடியும்.என்று அவர் கூறினார்.

Leave a Reply