நரேந்திர மோடியின் அலுவலகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த பெண்  குஜராத் முதல்வர் நரேந்திரமோடியின் அலுவலகத்துக்குள் நீண்டகத்தியுடன் பெண் ஒருவர் நுழைந்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் தலைநகர் காந்தி நகரில் புதிய தலைமை செயலகத்துக்குள் வெள்ளிக் கிழமையன்று 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சென்றிருக்கிறார். முதலாவது சோதனை தடுப்பைத்தாண்டி சென்றிருக்கிறார். பிறகு மற்றொரு சோதனை தடுப்பில் அவர் நுழைந்த போது எச்சரிக்கை அலாரம் அடிக்க தலைமைச்செயலகம் பரபரப்பானது.

பிறகு அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது அவரிடம் நீண்டகத்தி இருந்தது தெரியவந்தது. அவரிடம் மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணையில் சூரத்தைச்சேர்ந்த ஜூபேரியா உஸ்மான் ஹபிஜ் என்பதும் தெரிய வந்தது. தாம் முதல்வர் மோடியை சந்தித்து குறைகேட்க வந்ததாகவும் காய்கறி நறுக்கவே கத்திவாங்கியதாகவும் அப்பெண் கூறியிருக்கிறார். ஆனால் இதை ஏற்கமறுத்த போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்துகின்றனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத் தலைமைசெயலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது.

Leave a Reply