காஞ்சி மகாப் பெரியவரும் புரந்தரகேசவனும்  காஞ்சி மகாப் பெரியவர் அப்போது ஆந்திர மாநிலத்தில் விஜயம் செய்து கொண்டிருந்தார்; ஒரு நாள் ஒரு சிறிய கிராமத்தை தாண்டி மகாப்பெரியவர் போக வேண்டி இருந்தது ; வழியில் இருந்த அந்த கிராம மக்கள் எப்படி யாச்சும் மகாப்பெரியவரை நம்ம கிராமத்திற்குள் அழைத்து

செல்லன்னும்ன்னு ஆசை அதனாலே மகாப்பெரியவர் செல்லும் வழியில் கிராம மக்கள் வரிசையாக நின்றுக்கொண்டு மகாப்பெரியவர் வந்தவுடன் கீழே விழுந்து வணங்கி மகாபெரியவா எங்க கிராமத்திற்கு ஒரு முறை வந்து செல்லனும் ன்னு வேண்டி கேட்டுக்கொண்டார்கள் ;

பெரியவரும் சிரித்துக்கொண்டே சரி சரி ஒரு நாள் என்ன ஒரு வாரமே தங்கிட்டு போறேனே என்றார் ; கிராம மக்களுக்கு சொல்லொன்னா மகிழ்ச்சி உடடியாக கிராமம் மொத்தமும் சுத்தமா கூட்டி பெருக்கி கோலம் போட்டு மகாப்பெரியவர் ஒரு வாரம் தங்கு வதற்கான ஏற்பாடுகள் செய்து விட்டார்கள் ; மறு நாள் காலை மகாப்பெரியவர் சந்திர மவுலிசர் பூஜை செய்ய வில்வ தளம் வேணுமே இருக்கா கேளுங்கோன்னு சொன்னார் மடத்துகாரர்கள் கிராமத்து தலைவரிடம் கேட்டார்கள் கிராமத்து மக்களுக்கு வில்வதளம் எப்படி இருக்கும்ன்னு தெரியவில்லை ; மடத்திலிருந்து பழைய வில்வதலத்தைக் காட்டி எடுத்து வரச்சொன்னார்கள் ,

சிறுது நேரம் கழித்து வந்தவர்கள் கிராமத்தில் எங்குமே வில்வ மரமே இல்லை என்றார்கள் மடத்தை சேர்ந்தவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை மகாப்பெரியவரிடம் சென்று கையை பிசைந்துக்கொண்டு நின்றார்கள் மகாப்பெரியவர் என்ன வில்வதளம் கிடைக்கவில்லையா? சரி சரி கவலை விடுங்கோ ! அது தானே வரும் என்று சொல்லிவிட்டார் மறு நாள் விடியற் காலை பூஜைக்கு நேரமாச்சு வில்வதளம் இல்லையே என்ன பண்ணறது என்று யோசித்துக் கொண்டு இருந்த போது மடத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் கைகளில் கூடை நிறைய வில்வதளம் கொண்டு வந்தான் ;

எல்லோரும் அவனிடம் கேட்டார்கள் எப்படி வில்வதளம் கிடைத்தது அதற்கு அவன் வாசல் பக்கம் போனேன் , வாசலுக்கு முன்னாடி இது இருந்தது அப்படியே எடுத்துண்டு வந்துட்டேன் என்றான் ; மகாப்பெரியவர் சிரித்துக் கொண்டே என்ன வில்வதளம் வந்துடுத்தா என்றார் மடத்துக்காரர்கள் ஆமா கிடைச்சுடுத்து என்றார்கள் எப்படி கிடைச்சது என்று கேட்டதற்கு நடந்த விவரத்தை சொன்னார்கள் ; அப்படியா ரொம்ப சந்தோசம் நாளைக்கும் கிடைக்குதா பாருங்கோ சொல்லிவிட்டு பூஜை க்கு போய்விட்டார் ; அடுத்த நாள் காலை அதே சிறுவனை அனுப்பி வில்வதளம் கிடைகிறதா பார்த்து எடுத்து வரசொன்னார்கள் சிறுவனும் போனவுடனே அதே மாதிரி கூடை நிறைய வில்வதலத்தை எடுத்து வந்தான் ; மகாப்பெரியவர் கேட்டார் வில்வ இலையை யார் கொண்டு வரா தெரியுமான்னு ? எல்லோரும் திருதிருவென முழித்தார்கள் பதில் எதுவும் சொல்லவில்லை மகாப்பெரியவர் சொன்னார் விடியற் காலையில் ஒளிந்திருந்து பார்த்து வில்வைலையை எடுத்துக் கொண்டு வருபவனை அப்படியே அழைத்து வாருங்கள் என்றார்

மடத்துக் காரர்களும் மறு நாள் காலை பார்த்துக்கொண்டே இருந்தார்கள் ; அப்போது தூரத்தில் ஒரு உருவம் மெல்ல மெல்ல தயங்கியப்படியே வந்து கையில் இருந்த கூடையை வைத்து விட்டு ஒடப்பார்க்கும் போது மடத்துக்காரர்கள் அந்த உருவத்தை பிடித்து கொண்டு அப்படியே மகாப்பெரியவரிடம் முன்னால் நிறுத்தினார்கள் அவ்வுருவம் மிகச்சிறியவ னாய் இருந்தான் அழுக்குத்துண்டுடன் சிறிது நடுங்கியபடி நின்றிருந்தான் ; மக்கப்பெரியவர் அவனை அருகில் அழைத்து உன் பெயர் என்ன என்றுக் கேட்டார் அவனும் மென்று முழுங்கியபடியே புரந்தரகேசவன் என்று சொன்னான் ;

அப்படியா யார் இந்த பெயரை வைத்தார்கள் கேட்டதற்கு அவன் சொன்னான் எங்க அப்பா தான் வைச்சார் அவருக்கு புரந்தரரை ரொம்ப பிடிக்கும் அதனால் எனக்கும் புரந்தர கேசவன் அப்படின்னு பேர் வைச்சார் இப்ப அவர் இல்லை ; நான் காட்டில் மாடு மேய்த்து வருகிறேன் ; அப்பா இருக்கும் போது காட்டில் ஒரு மரத்தை காட்டி இதை நல்லா நினைவில் வைத்துக்கொள் ; ஒரு நாள் நம்ப கிராமத்திற்கு பெரியவர் ஒருவர் வருவார் , அப்போ இந்த மரத்து இலைகள் அவருக்கு தேவைப்படும் , அப்போ நீபோய் இந்த இலைகளை அவரிடம் சேர்த்து விடுன்னு சொன்னார் ; கிராமத்து மக்கள் தேடினது எனக்கு தெரிந்தது ; அதனால கொண்டுவந்து வைத்தேன் என்றான் ;

அப்படியா !அது சரி நீ ஏன் உள்ள வராம வாசலிலேயே வைச்சுட்டு ஓடிப் போயடரே? புரந்தரகேசவன் ; நான் குளிக்காம அழுக்குத்துணி யோட எப்படி வரது ?அதனாலதான் உடனே மகாப்பெரியவர் அவனை குளித்து புது வேட்டியை கொடுத்து கட்டிக்கொள்ள சொன்னார் ; பிறகு இனிமே நீ வில்வ தளத்தை எடுத்துண்டு வந்து கொடுத்துட்டு சாப்பிட்டு விட்டு இங்கேயே இரு என்றார் ; புரந்தர கேசவனுக்கு ரொம்ப சந்தோசம் இப்படியாக ஒரு வாரம் கழிந்தது , கடைசி நாள் மகாப்பெரியவர் வேற ஊருக்கு கிளம்பறார் ; புரந்தர கேசவன் கண்களில் கண்ணீர் மல்க ஒரு ஓரமாய் நின்றுக் கொண்டிருந்தான் ; மகாப்பெரியவர் அவனை அழைத்து நான் உனக்கு என்ன செய்யணும் என்றுக் கேட்டார் ; அதற்கு அவன் என்னோட கடைசிக் காலத்தன்னைக்கு நீங்கதான் எனக்கு எல்லாம் செய்யணும் என்றான் ;

மகாப்பெரியவர் அவன் தலையில் கை வைத்து ஆசீர்வாதம் செய்து விட்டு புறப்பட்டார் பல ஆண்டுகள் இருண்டோடியது ; அன்றொரு நாள் காலையில் மகாப்பெரியவர் யாரிடமும் எதுவும் பேசவில்லை , அங்கிருந்த குளத்தில் நீராடிவிட்டு ஒரு கல் மேல் அமைந்துக் கொண்டு தியானம் செய்தார் ; மறுபடியும் குளத்திற்கு சென்று நீராடினார் , மீண்டும் கல் மீது அமர்ந்து தியானம் செய்தார் ; இதுப் போல் ஏழு முறை செய்தார் அங்கிருந்தவர் களுக்கு ஒன்றும் புரியவில்லை ;

அப்போது மடத்து அதிகாரி கையில் ஒரு தந்தியுடன் அங்கு வந்தார் . மகாப்பெரியவர் அவரிடம் என்ன புரந்தர கேசவன் தவறிப் போயிட்டானா ? அதனாலதான் நான் அவனுக்கு கர்மா பண்ணிண்டு இருந்தேன் ; அப்போது அங்கிருந்தவர்கள் அவரிடம் நீங்கள் ஏன் ஏழு முறை நீராடி னீர்கள் என்று கேட்டனர் ; அதற்கு மகாப்பெரியவர் இன்னுமவனுக்கு பலப் பிறவிகள் உண்டு அதனாலே அவனோட ஒவ்வொரு பிறவியையும் நான் கர்மா செய்து அவனை நேரா சொர்கலோகம் அனுப்பி வைத்தேன் என்றார் ;

Leave a Reply