இந்து முன்னணி மாநில செயலாளர் சு.வெள்ளையப்பனின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டுவரப்படுகிறது வேலூரில் வெட்டிக் கொலைசெய்யப்பட்ட இந்து முன்னணி அமைப்பின் மாநிலசெயலாளர் சு.வெள்ளையப்பனின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டுவரப்படுகிறது.

நெல்லைமாவட்டம் சங்கரன் கோவிலை அடுத்த சேர்ந்தமரம் துரைசாமி புரம் பகுதியை சேர்ந்தவர் சு. வெள்ளையப்பன் அவர் திருமணம்செய்யாமலே பிரமச்சாரியாக சொந்த ஊரை விட்டு இந்து முன்னணி_அமைப்பில் பொறுப்பேற்று திவீரமாக பணிபுரிந்து வந்தார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்புதான் இந்த அமைப்பின் மாநிலசெயலாளராக பொறுப்பேற்றார். இந்நிலையில் அவர் வேலூரில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் அவரது உடல் அவரது சொந்த ஊரான துரைசாமி புரத்துக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம்செய்யப்படுகிறது. இதனால் நெல்லை மாவட்டத்தில் பரப்பரப்பான சூழல் நிலவிவருகிறது.

Leave a Reply