குஜராத்  பஞ்சாயத்து தேர்தல்களில் பாஜக  அபாரவெற்றி குஜராத்தில் நடைபெற்ற ஜில்லா , தாலுகா பஞ்சாயத்துதேர்தல்களில் பாஜக அபாரவெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ்வசம் இருந்த பல பஞ்சாயத்துகளை பா.ஜ.க கைப்பற்றியுள்ளது.

குஜராத்தின் ஜில்லா பஞ்சாயத்துக் களுக்கான தேர்தல் சபர் கந்தா, மெக்‌ஷானா மற்றும் போர் பந்தர் மாவட்டங்களில் நடந்தது . மூன்று ஜில்லா பஞ்சாயத்துக்கு நடந்த தேர்தலில் 3 இடங்களையுமே பா.ஜ.க கைப்பற்றியுள்ளது. கடந்தமுறை காங்கிரஸ்வசம் இரண்டு பஞ்சாயத்துகளும் பா.ஜ.க வசம் ஒரே ஒருபஞ்சாயத்துமே இருந்தது. இதேபோல் வல்சாத்,தபி, பரூச், சூரத் பஞ்சமால், , வதோரா,ஆனந்த், தஹோட், காந்திநகர், சபர்கந்தா, ராஜ்கோட், ஜூனாகத் மாவட்டங்களில் 19 தாலுகா பஞ்சாயத்துகளுக்கு தேர்தல்நடைபெற்றது. இதில் 12 இடங்களை பாஜக கைப்பற்றியுள்ளது. 7 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. கடந்தமுறை இந்த 19-ல் 15 காங்கிரஸ்வசம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply