முலாயம்சிங் யாதவ் பிரதமரின் வீட்டில் பெருக்கும் வேலைகிடைக்குமா? என முயற்சிக்கலாம் சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் பிரதமரின் வீட்டில் வீடு பெருக்கும் வேலைகிடைக்குமா? என்று முயன்று பார்க்கலாம் என மத்திய மந்திரி பேனி பிரசாத் வர்மா விமர்சித்துள்ளார்.

முலாயம்சிங் யாதவ்வின் நெருங்கியநண்பராக இருந்து காங்கிரசில் இணைந்த மத்தியமந்திரி பேனிபிரசாத் வர்மா உத்தரபிரதேச மாநிலம், பைசா பாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசியதாவது:-

சமாஜ்வாதி கட்சி பொதுவாக பொய், பித்தலாட்டம், மோசடி போன்றவைகளை அடிப்படையாக கொண்டு இயங்கி வருகிறது. வரும் பாராளுமன்றதேர்தலில் அந்த கட்சி காணாமல் போய்விடும்.

இந்தியாவின் பிரதமராக வரவேண்டும் என முலாயம்சிங் யாதவ் கனவுகாண்கிறார். அதற்கு முன்னதாக பிரதமரின் வீட்டில் பெருக்கும்வேலை கிடைக்குமா? என அவர் முயற்சிப்பது நன்று என அவர் தெரிவித்தார்.

Leave a Reply