நரேந்திர மோடியை பார்த்து  நிதிஷ் குமார் பயப்படுகிறார்;பாபா ராம்தேவ் நரேந்திரமோடி வளர்ந்து விட்டால் தனக்கு ஆபத்து என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நினைக்கிறார் என யோகாகுரு பாபா ராம்தேவ் கருத்து தெரிவித்துள்ளார். .

பீகார் தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது:-

ஐ.மு., கூட்டணி அரசின் ஊழல்ஆட்சிக்கு முடிவு கட்ட பின்தங்கிய பிரிவைசேர்ந்த ஒருவர் முன்வந்திருப்பது குறித்து நிதிஷ்குமார் மகிழ்ச்சி அடைய வேண்டும். நரேந்திரமோடி வளர்ந்துவிட்டால் தனக்கு ஆபத்து என நிதிஷ் குமார் நினைக்கிறார்.

முன்பெல்லாம் மோடியின் வளர்ச்சியைகண்டு மேல்தட்டு பிரிவினர் மட்டும்தான் கலக்கம் அடைந்தனர். தற்போது இதர பிரிவினர்களும் பயப்பட தொடங்கிவிட்டனர். இதை போன்ற தேவையற்ற பய உணர்வு நாட்டுக்கு நல்லதல்ல.

நானும் இதை போன்ற பிரிவை சேர்ந்தவன்தான். பின்தங்கிய பிரிவினரின் நல் வாழ்வுக்காக நாம் அனைவரும் ஒன்று சேரவேண்டும் என்று அவர் கூறினார்.

Leave a Reply