ஜனதா கட்சியை பாஜக.,வுடன் இணைக்க தயார்  பாஜக., பார்லிமென்ட் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி சென்ற குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமி சந்தித்து பேசினார் பிறகு தமது ஜனதா கட்சியை பாஜக.,வுடன் இணைக்க தயார் என அறிவித்தார்.

டெல்லியில் நடைபெறும் பாஜக.,வின் பார்லிமென்ட் குழுக்கூட்டத்தில் சட்ட சபை தேர்தல்கள் மற்றும் லோக்சபா தேர்தல்வியூகம் வகுக்க நரேந்திர மோடி வருகை தந்துள்ளார். இன்று காலை டெல்லி குஜராத் பவனில் நரேந்திர மோடியை ஜனதா கட்சித் தலைவர் சுப்பிர மணியன் சுவாமி திடீர் என சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுவாமி, நான் முன்னாள் ஜனசங்க அமைப்பை சேர்ந்த ஜனசங்கி. பாஜக விரும்பினால் அந்த கட்சியுடன் நாங்கள் இணைகிறோம். எங்களது சித்தாந்தமும் பா.ஜ.க.,வின் சித்தாந்தமும் ஒன்றுதான். இருகட்சிகளும் இணையவேண்டும் என்று பா.ஜ.க., விரும்பினால் நான் தயாராக உள்ளேன் . நரேந்திரமோடி எனது பழைய நண்பர். . அவர் பா.ஜ.க தலைமை ஏற்பதை ஆதரிக்கிறேன் என்று தெரிவித்தார்.

Leave a Reply