லஷ்கர் இதொய்பா தீவிரவாத அமைப்புக்கு இருக்கும்  தொடர்பை குறைத்துகாட்ட முயற்சி இஷ்ரத் ஜஹான் வழக்கில் லஷ்கர் இதொய்பா தீவிரவாத அமைப்புக்கு இருக்கும் தொடர்பை குறைத்துகாட்ட முயல்கிறதா சி.பி.ஐ என கேள்வி எழுவதாக பா.ஜ.க கருத்துதெரிவித்துள்ளது.

சிபிஐ குற்றப் பத்திரிக்கை குறித்து பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் தெரிவித்ததாவது, லஷ்கர் இதொய்பாவின் பங்கு குறித்து சி.பி.ஐ பேசவே இல்லை. இது பலகேள்விகளை எழுப்புகிறது. இந்தியபாதுகாப்பு எந்த அளவுக்கு கேலிக்குரியதாக இருக்கிறது என்பதை இது காட்டுகிறது.

சம்பவத்தின் பின்னணி, அதற்க்கான காரணங்கள் போன்றவை குறித்து சி.பி.ஐ மெளனம்சாதித்துள்ளது வியப்பைத்தருகிறது . பலகேள்விகளை எழுப்புகிறது. இஷ்ரத் உள்ளிட்டோர் யார் என்பதைக்கூட சி.பி.ஐ.,யால் கூறமுடியவில்லை. இஷ்ரத்துடன் வந்தவர்கள் யார் என்பதையும் சி.பி.ஐ.,யால் கூற முடியவில்லை. இவர்கள் தீவிரவாததொடர்பு உடையவர்கள். தீவிரவாதிகளுடன் 20க்கும் அதிகமான தொலைபேசி அழைப்புகளை சாட்டிலைட்போன் மூலம் பேசியுள்ளனர்.

சி.பி.ஐ.,யின் அறிக்கையில் மத்திய_ அரசின் தலையீடு இருப்பது தெளிவாக தெரிகிறது. இது நாட்டின் பாதுகாப்புதொடர்பானது. தீவிரவாதம் தொடர்பான விஷயங்களில் மத்திய அரசு விளையாடக்கூடாது, அரசியல் செய்யக்கூடாது என்றார் அவர்.

Leave a Reply