ஏகே.அந்தோணி தனது சீன பயணத்தை ரத்து செய்ய வேண்டும்  பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏகே.அந்தோணி தனது சீனபயணத்தை பாதியிலேயே ரத்துசெய்து இந்தியா திரும்பவேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏகே.அந்தோணி சீனாசென்றுள்ள நிலையில் சீன ராணுவத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான யோயூவான் இந்தியாவை எச்சரிப்பதை போன்று கருத்துவெளியிட்டு இருந்தார். எல்லைப்பிரச்சனை பற்றி இந்தியா கவனத்துடன் பேசவேண்டும் என்று அவர் கூறியிருந்தார். மேலும் சீனாவிற்குள் இந்தியா_ஊடுருவி சீன பகுதிகளை ஆக்கிரமித்துள்ளதாக சீன ராணுவதளபதி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் சீனா சென்றுள்ள நிலையில், சீன தளபதியின் இந்தகருத்து, இந்தியாவை அவமதிக்கும்செயல் என்று பாஜக கருத்து தெரிவித்துள்ளது. மேலும் சீனபயணத்தை ஏகே.அந்தோணி பாதியிலேயே ரத்துசெய்ய வேண்டும் என்று அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. சீன தளபதியின் கருத்துக்கு இந்தியா கடும்கண்டனத்தை தெரிவிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது .

Leave a Reply