பாஜக.,வில்  இணைந்த சிரஞ்சீவியின் மருமகன் ஆந்திர மாநில பிரபல நடிகரும் மத்திய அமைச்சருமான சிரஞ்சீவியின் மருமகன் பாஜக.,வில் இணைந்துள்ளார். இவர் நரேந்திரமோடியை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.

.
சிரஞ்சீவியின் இளையமகள் ஸ்ரீஷாவின் கணவர் ஜிஆர்.பரத்வாஜ். காதல் திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் பிரிந்துவாழ்ந்து வருகிறார்கள்.

இவர்களது விவாகரத்து வழக்கு குடும்பநல நீதிமன்றத்தில் உள்ளது. இந்த நிலையில் ஜிஆர். பரத்வாஜ் பாஜக.,வில் இணைந்துள்ளார் . இதை ஆந்திர மாநில பாஜக.,வின் இளைஞர் அணிதலைவர் விஷ்ணுவர்த்தன் ரெட்டி உறுதி செய்துள்ளார் பாஜக.,வில் இளைஞர் அணியில் புதியபொறுப்பும் பரத்வாஜூக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சிரஞ்சீவியின் மருமகன் பரத்வாஜ் கூறியதாவது: நாட்டை நல்லமுறையில் வழிநடத்தக்கூடிய அரசியல்கட்சியாக தற்போது பாஜக.,தான் திகழ்ந்துவருகிறது. எனவே அந்தகட்சியில் சேர்ந்து தீவிர அரசியலில் ஈடுபட முடிவுஎடுத்தேன்.

நான் பிஜேபியில் சேர்ந்ததும் குஜராத் முதல்மந்திரி நரேந்திரமோடியை சந்தித்து ஆசிபெற்றேன். அவரை ஆந்திராவுக்கு வருமாறு அழைத்தேன். ஐதராபாத்தில் ஆகஸ்டு 3ந்தேதி நடக்கும் பாஜக இளைஞர் அணிகூட்டத்தில் அவர் கலந்துகொள்கிறார். ஆந்திராவில் பாஜக.,வை வலுப்படுத்தக தொடர்ந்து பாடுபடுவேன்.என்று அவர் கூறினார்.

Leave a Reply