லஷ்கருக்கும் சரி; காங்கிரசுக்கும் சரி; - பொது எதிரி மோடி தான் காங்கிரஸ் என்றாலே, தமிழக அரசியல் அகராதியில் "கோஷ்டி பூசல்" என்று தான் பதியப்பட்டிருக்கும். அந்த பாரம்பரிய அடிப்படையில் தான் என்னவோ, தற்பொழுது, மத்திய அரசின் கீழ் செயல்படும் CBIக்கும், உளவு நிறுவனமான IBக்கும் கோஷ்டி பூசல் நடக்கிறது. இந்த கோஷ்டி பூசலின் உண்மையான Target யார் என்றால், அது நரேந்திர மோடி தான்!

விஷ்யம் என்னவென்றால், 15-6-2004 அன்று குஜராத்தின் அகமதாபத்தில், DIG வஞ்சாரா தலைமையில் ஒரு என்கௌன்டர் நடத்தப்பட்டது. இதில், இஷ்ரத் ஜஹான், ஜாவித் ஷேக், அம்ஜத், ஜுஷன் ஜோகர் ஆகிய நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட இந்த நால்வர் ஒன்றும் அப்பாவிகளோ, தேச பக்தர்களோ கிடையாது. இந்த நால்வருமே நரேந்திர மோடியை கொல்வதையும், குஜராத்தில் தீவிரவாத தாக்குதலை நடத்துவதையும் தங்கள் பணியாக ஏற்றுக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் தான். இது பற்றிய உளவு தகவலை குஜராத் காவல் துறைக்கு அனுப்பியது வேறு யாரும் அல்ல, மத்திய அரசின் கீழ் செயல்படும் உளவு துறையில் ஒன்றான Intelligence Bureau தான்! இந்த என்கௌன்டரின் போது, இந்த தீவிரவாதிகளிடம் இருந்து AK-56, AK-47 மற்றும் 9 MM Pistolகள் இரண்டும் கைப்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த என்கௌன்டர் நடந்த உடன், "இஷ்ரத் ஜஹான் தான் எங்களுடைய முதல் பெண் தியாகி" என்று லஷ்கர் தீவிரவாத அமைப்பு புகழாரம் சூட்டி, தலையில் தூக்கி வைத்து கொண்டாடியது. மத்திய அரசும், நீதிமன்றத்தில், "இஷ்ரத் ஜஹான் ஒரு தீவிரவாதி தான்" என்று முதலில் கூறியது.

ஆனால், வழக்கம் போலவே திடீர் என்று முளைத்த மனித உரிமை ஆர்வலர்களும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் "இது போலி என்கௌன்டர்" என்று பல்லவி பாட ஆரம்பித்தவுடன், லஷ்கர் அமைப்பு ஒரு அந்தர் பல்டி அடித்து, "அந்த பெண் எங்கள் இயக்கத்தவரே அல்ல" என்று சத்தியம் செய்தது!

லஷ்கருக்கும் சரி; காங்கிரசுக்கும் சரி; – பொது எதிரி மோடி தான். அப்படி இருக்கையில், லஷ்கர் பல்டி அடித்த பின்னர், காங்கிரஸ் மட்டும் சும்மா இருக்குமா என்ன? காங்கிரஸ்  இரண்டு அந்தர் பல்டி அடித்து, "இஷ்ரத் ஜஹான் தீவிரவாதியே அல்ல" என்று நீதிமன்றத்தில் மன்றாடியது! (* மொத்தத்தில் காங்கிரசுக்கும், லஷ்கருக்கும் வித்தியாசம் இல்லை. இவை இரண்டுமே நம் தேசத்திற்கு எதிரான அமைப்புகள் என்று புரிகிறது.)

அமெரிக்காவில் பிடிப்பட்ட லஷ்கர் தீவிரவாதியான டேவிட் ஹட்லி(David Headly) கூட, "இஷ்ரத் ஜஹான் லஷ்கர் இயக்கத்தின் தற்கொலை(மனித வெடிகுண்டு) பிரிவை சேர்ந்தவள் தான்" என்று தேசிய புலனாய்வு அமைப்பிடம்(NIA) தெரிவித்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், கடந்த 3-7-2013 அன்று, இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த CBI, "இஷ்ரத் தீவிராவிதியே அல்ல; ஆனால், மற்ற மூன்று பேரும் தீவிரவாதிகள் தான்! அவர்கள் நரேந்திர மோடியை கொல்ல வரவில்லை, தாக்குதல் நடத்த தான் வந்துள்ளனர்!" என்று அதில் கூறியுள்ளனர். மேலும், அந்த குற்றப்பத்திரிக்கையில் IBயின் இணை இயக்குணரான ராஜேந்திர குமார் என்பவரும், குஜராத் போலிஸ் அதிகாரிகளும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். தேசத்திற்காக தங்கள் உயிரை பயணம் வைத்து போராடி அவர்களுக்கு, காங்கிரஸ் தந்த பதக்கம் தான் இது!

இதில் வேடிக்கை என்னவென்றால், இஷ்ரத் ஜஹான் என்ற 19 வயது பெண், அதாவது, கல்லூரி படிப்பைக் கூட முடிக்காத ஒரு பெண், ஜாவித் ஷேக்கின் செக்கரட்டரியாக பணியாற்றினாளாம்! ஜாவித் ஷேக் வெளியூர் செல்லும் போது இர்ஷத்தையும் தன்னோடு அழைத்து செல்வானாம்! நம் நாட்டில் முதுகலை பட்டம் பெற்றவனே, முதுகு வலிக்க வேலைத் தேடிக் கொண்டிருக்க, கல்லூரி படிப்பையே முடிக்காத ஒரு பெண் செக்ரட்டரியாக பணியாற்றியது வினோதமாக உள்ளது! இதன் உண்மையும் லஷ்கர்-இ-தொய்பாவிற்கே வெளிச்சம்!

தீவிரவாத நடவடிக்கைகளை தவிர்த்துக் கூட, ஜாவித் ஷேக் மீது நான்கு அடிதடி வழக்குகள் மும்பை மற்றும் புனே போலிசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவன் கள்ள நோட்டு வழக்கிலும் சிக்கிய உத்தமன் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ், நரேந்திர மோடியைக் கண்டு நடுங்குகின்றது. BJP, நரேந்திர மோடி என்ற மலையை களம் இறக்கும் போது, அதை எதிர்த்து ராகுல் காந்தி என்ற ஒரு மடுவால் ஒன்று செய்துவிட முடியாது என்று காங்கிரசுக்கே தெரியும். அதனால் தான், ஏதாவது ஒரு வழியில் நரேந்திர மோடிக்கும், குஜராத் அரசுக்கும் அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் செயல்படுகிறது.

காங்கிரஸின் இந்த இழிவான செயலுக்கு, இன்று உளவு துறையும் இரையாக்கப்பட்டுள்ளது. ராஜேந்திர குமார் மீது CBI வழக்கு பதிவதை எதிர்த்த IB அமைப்பு, தன் உளவு தகவல்களை CBI, NIA போன்ற புலனாய்வு அமைப்புகளிடம் பகிர்வதை நான்கு நாட்களுக்கு நிறுத்துவிட்டது, என்று செய்திகள் வெளியாகியுள்ளன. பாரதம் போன்ற தீவிரவாத அச்சுறுத்தல் அதிகம் உள்ள தேசத்தில், இது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பது நாம் அறிந்த ஒன்றே!

இத்தனைக்கும் உளவு துறையான IB மத்திய அரசின் கீழ் நேரடி கண்காணிப்பில் செயல்படுகின்ற ஒரு அமைப்பு. IB மீதும், அதன் உயர் அதிகாரிகள் மீதும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள், மத்திய அரசின் மீது குற்றம் சுமத்துவதற்கு சமம். ஆனால், காங்கிரஸ் அதைப் பற்றி கவலைப்படாது. "தனக்கு ஒரு கண் போனாலும், தன் எதிரிக்கு இரண்டு கண்ணும் போக வேண்டும்" என்று நினைப்பவர்கள் ஆயிற்றே! காங்கிரஸ் மீது இல்லாத குற்றச்சாட்டா? இருக்க கூடிய ஆயிர கணக்கான குற்றச்சாட்டுகளில், இதுவும் ஒன்றாக சேர்ந்துக் கொள்ள போகிறது அவ்வளவு தான். ஆனால், இதன் மூலம் நரேந்திர மோடியின் மதிப்பை கெடுத்து விட முடியும் என்று அவர்கள் நிம்புகின்றனர். இதற்கு ஏற்றார் போல, CBI இது போலி என்கௌன்டர் என்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தவுடன், "ZERO-LOSS" கபில் சிபல், "குஜராத்தில் சட்டம் ஒழுங்கே சரியில்லை!" என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள், இந்த என்கௌன்டர் பற்றி மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று மீண்டும் கொக்கரிக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்த என்கௌன்டர் சம்பந்தமாக மோடி விளக்கம் தர வேண்டிய அவசியமே இல்லை. விளக்கத்தை IB தலைவரே அளித்துள்ளார். JUNE, 2013ல் IBயின் தலைவரான ஆசிப் இப்ராகிம்(Asif Ibrahim), பிரதமர் அலுவலகத்துக்கும், உள்துறைக்கும் அளித்த தகவலில், "இஷ்ரத், மோடியையும், அத்வானியையும் கொல்ல தீட்டப்பட்ட சதி திட்டத்தில் ஈடுபட்ட, லஷ்கர்-இ-தொய்பா தீவாரவாதி தான். இதை நிருபிக்க எங்களிடம் போதுமான ஆதாரம் உள்ளது." என்று கூறியுள்ளார்.

13-6-2013 அன்று, Headlines Today தொலைக்காட்சி, "15-6-2004யில் நடந்த என்கௌன்டரில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் Hit-Listல், அத்வானி மற்றும் மோடி முதலிடத்தில் இருந்துள்ளனர் என்றும்; இஷ்ரத்தும் இந்த சதி திட்டத்தில் ஈடுபட்ட ஒரு தீவிரவாதி தான்" என்று ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. மேலும், ஜாவித் ஷேக்கிற்கும், லஷ்கர் தீவிரவாத தலைவர்களுக்கும் இடையே நடந்த பேச்சுக்கள் அடங்கிய ஒரு Audio Tape ஒன்றையும் அத்தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இது மட்டுமல்ல, "டேவிட் ஹட்லி, இர்ஷ்த் லஷ்கர் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவள் தான்" என்று கூறியதை மேற்கோள்காட்டி, IBயின் தலைவர் CBIக்கு எழுதிய ஒரு கடிதத்தையும் Headlines Today வெளியிட்டுள்ளது.

"CBI ஒரு கூண்டு கிளி" என்று ஏற்கனவே நம் உச்சநீதிமன்றம் விமர்சித்துள்ளது. அது உண்மையும் கூட. காங்கிரஸ் தலைமை தரக்கூடிய அரிசிக்காக, காங்கிரஸ் கூறியதையே தங்கள் விசாரணை அறிக்கையாக CBI தருகின்றனர். "இர்ஷத் என்கௌன்டர் விசாரணை என்பது, நரேந்திர மோடியை மையமாக வைத்து வரையப்படுகின்ற ஒரு சதி தான்" என்பதை ஒரு சிறிய புள்ளி விபரம் மூலம் நாம் தெரிந்துக் கொள்ளலாம்.

நம் தேசத்தில் 2002 – 2007 வரை நடந்த மொத்த என்கௌன்டர்களின் எண்ணிக்கை 712. இவற்றில், 440  என்கௌன்டர்கள் போலி என புகார்கள் எழும்பி, விசாரணையில் உள்ளன.

இதில், உத்திர பிரதேசத்தில் 231, மகாராஷ்டராவில் 31, ஆந்திராவில் 22, அசாமில் 12, டில்லியில் 26, தமிழகத்தில் 9, மேற்கு வங்கத்தில் 8, குஜரத்தில் 5 என இப்பட்டியல் நீழ்கிறது. இதில், மகாராஷ்டரா, ஆந்திர, அசாம், டில்லி ஆகிய இடங்களில், பல காலமாக காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அனைத்து புகார்கள் பற்றிய விசாரணை, தேசிய மனித உரிமை கமிஷன் முன்பு நடைபெற்று வருகிறது. போலி என்கௌன்டர் என்று புகார் எழும்பிய 440 என்கௌன்டர் பற்றியோ, அல்லது, புகார்கள் எழாத 272 என்கௌன்டர் பற்றியோ மத்திய அரசு கவலைப்படவில்லை! அதைப் பற்றி CBI கவலைப்படவில்லை! நம் மீடியாக்களும் கவலைப்படவில்லை!

ஆனால், இருப்பதிலேயே குறைவான என்கௌன்டர் புகார்கள் உள்ள குஜராத் மட்டும் தான் எல்லோருக்கும் பெரிதாக தெரிகிறது. ஏன்யென்றால், அங்கு நடப்பது BJP அட்சியாயிற்றே! முதல்வராக இருப்பது நரேந்திர மோடி அல்லவா!

2002 – 2007 வரை நடந்த என்கௌன்டர் புகார்களை விட்டுவிடுங்கள். இஷ்ரத் என்கௌன்டர் செய்யப்பட்ட அதே கால கட்டத்தில்(2004-2005), உத்திர பிரதேசத்தில் 54 என்கௌன்டர், ஆந்திராவில் 6 என்கௌன்டர் நடந்துள்ளது. ஆனால், குஜராத்தில் 2004-2005ல் ஒரே ஒரு என்கௌன்டர்(இஷ்ரத்) மட்டும் தான் நடந்துள்ளது! 54 பற்றியோ, 6 பற்றியோ கவலைப்பட நாதி இல்லை. ஆனால், நம் தேசத்திற்கு எதிரான தீவிரவாதிகளை கொன்றது தான் பெரிய பாவமாகிவிட்டது போல!

ஆனால், இந்த உண்மைகள் அனைத்தையும் மறைத்து, தன் அடியாள்களான CBIயின் உதவியுடன், மோடியின் மக்கள் செல்வாக்கை உருகுலைத்துவிடலாம் என்று காங்கிரஸ் எண்ணுகிறது.

ஆனால், இது நடக்காது. ஏற்கனவே, சோராபுதீன் என்ற பாகிஷ்தான் ISI உளவு Agent, குஜராத்தில் என்கௌன்டர் செய்யப்பட்ட போது, இதே போல தான் காங்கிரசும், மோடி எதிர்பாளர்களும் ஆ… ஊ என்று கத்தினர். இதன் உச்சகட்டமாக, குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, சோனிய காந்தி, சோராபுதீனை ஒரு மகாத்மாவாகவும், நரேந்திர மோடியை "மரண வியாபாரி" என்றும் பிரச்சாரம் செய்தார். ஆனால், மக்கள் காங்கிரசுக்கு மரண தண்டனை அளித்தனர்! இது தான் மறுபடியும் நடக்க போகிறது.

நன்றி ; பாரத் வாய்ஸ் சுஜின்

Leave a Reply