என்எல்சி. விவகாரத்தில் மத்திய அரசின் பிடிவாதப் போக்கு கண்டனத்துக்குரியது என்எல்சி. விவகாரத்தில் மத்திய அரசு தான்எடுத்த நிலையிலிருந்து பின்வாங்க மாட்டேன் என்ற பிடிவாதப் போக்கை கடைபிடித்துவருவது மிகவும் கண்டனத்திற்குரியது என பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:-

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனைசெய்யும் மத்திய அரசின் முடிவுக்கு தமிழகத்திலுள்ள ஆளுங்கட்சி, எதிர்கட்சிகள் உட்பட அனைத்துகட்சிகளும் கடும் எதிர்ப்பினை தெரிவித்துவருகின்றன.இம்முடிவிற்கு எதிர்ப்புதெரிவிக்கும் வகையில் என்எல்சி.,யின் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றினைந்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு தான் எடுத்த நிலையிலிருந்து பின்வாங்க மாட்டேன் என்ற பிடிவாதப் போக்கை கடைபிடித்து வருவது மிகவும் கண்டனத்திற்குரியது. நெய்வேலி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்கும்முடிவை கைவிட்டு, தமிழக அரசுடன் பேசி அதன்வசம் ஒப்படைப்பதே சரியான முடிவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்

Leave a Reply